பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/904

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

prostatectomy

903

prostin


prostatectomy : சிறுநீர்ப்பை வாயில் சுரப்பி அறுவை : சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

prostatic acid phosphatase : புரோஸ்டாட்டிக் அமில ஃபாஸ்ஃபாட்டேஸ் : சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பியினால் சுரக்கப்படும் விந்து நீர்மத்திலுள்ள ஒரு செரிமானப் பொருள்.

prostatic massage : முன்வாயில் சுரமபபி அமுக்கம் : சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியை அமுக்கி விடுதல் அழுத்தித் தடவுதல்.

prostatism : சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பி நோய் : சிறு நீர்ப்பை முன்வாயில் சுரப்பியில் ஏற்படும் நோய். சிறுநீர் அடைப்பு, சிறுநீர்க் கசிவு போன்றவை இதன் அறிகுறிகள்.

prostatitis : முன்வாயில் சுரப்பி அழற்சி : சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பியில் ஏற்படும் வீக்கம்.

prostatocystitis : சிறுநீர்ப்பை அழற்சி : சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பியிலும், ஆண்களின் சிறுநீர்ப்பையிலும் ஏற்படும் வீக்கம்.

prostheon : முன்முனை : மேல் தாடையின் பற்குழிவளைவின் கீழ்முனையின் நடுப்புள்ளி.

prosthesis : சீரமைவு அறுவை முறை; செயற்கை உறுப்புப் பொருத்தல்; கட்டுறுப்பு : ஊனங்களைச் செயற்கையாகச் சீரமைப்பதற்கான அறுவை முறை, உடம்பில் செயற்கை உறுப்புகளை இணைத்தல்.

prosthetics : செயற்கை உறுப்பு செய்தல்; செயற்கை உறுப்பு அமைத்தலியல் : உடம்பில் செயற்கை உறுப்புகளை இணைக்கும் அறுவை மருத்துவப் பிரிவு.

prostheitc group : ஒட்டும் தொகுதி.

prosthetier : செயற்கைப் பல்லியல்.

prosthetist : செயற்கை உறுப்பு வல்லுநர் : ஒரு முட நீக்கியல் அறுவை மருத்துவரின் அறிவுரைப்படி, செயற்கை உறுப்புகளையும் போன்ற மற்ற கருவிகளையும் வடிவமைத்து செய்து பொருத்துபவர்.

prosthokeratoplasty : கருவிழி இணைப்பு முறை : மனித அல்லது விலங்குத் திசுவாக இல்லாத ஒரு பொருளைக் கருவிழிப் படத்தில் பொருத்தும் அறுவை மருத்துவ முறை.

prostin : புரோஸ்டின் : மகப்றுே இடுப்பு வலியைத் தூண்டு வதற்குகாகக் கொடுக்கப்படுப் புரோஸ்டா கிளாண்டில்-E2