பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/903

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

prospective study

902

prostate (gland)


சோதனை முறை. 2. ஒரு நபர்களுக்கு நோய் நிலை பாதிப்பை அறிய விரும்பி சோதனையை துவக்கி நடத்தி முடித்தல்.

prostacyclin : புரோஸ்டாசைக்ளின் : குருதிநாளச் சுவர்களின் அக அடர்ப்படலத்தின் உயிரணுக்களினால் அமைந்த, இயற்கையாக உண்டாகும் ஒரு இயக்கப் பொருள். இது தகட்டணுக்கள் திரள்வதைத் தடுக்கிறது.

prostaglandins : புரோஸ்டாகிளாண்டின்ஸ் : முதலில் பிராஸ்டேட் சுரப்பியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இயக்குநீர்கள், வைட்டமின்கள், செரிமானப்பொருள் வினையூக்கிகள் ஆகியவற்றின் சில இயல்புகளைக் கொண்ட பொருள். உடல் திசுக்கள் அனைத்தும் ஏதேனும் புரோஸ்டா கிளாண்டினைக் கொண்டிருக்கிறது. தொடக்க நிலையில் கருச்சிதைவு செய் வதற்கும், ஈளை நோய்க்கும், இரைப்பை மிகை அமிலத் தன்மைக்கும் பயன்ப டுத்தப்படுகிறது.

prostanoid : புராஸ்னாய்டு : புராஸ்டா கிளான்டின்கள், புராஸ்ட்னாயிக் அமிலம் மற்றும் திராம்பாக் ஸேன்கள் உள்ளிட்ட, அரக்கி னாய்டிக் அமிலத்திலிருந்து பெறப்பட்ட பல்திறக்கூட்டு கொழுப்பு அமிலங்களின் தொகுதியிலொன்று.

prostate (gland) : சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பி : ஆண்பால் உறுப்புக்கு உடன் இணைவாக உள்ள சுரப்பித் திரள்களாலான பெருஞ்சுரப்பு.