பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/906

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

proteinase

905

proton


புரதங்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

proteinase : புரோட்டீனேஸ் : உள்ளிருக்கும் புரதங்கள் அல்லது பல்பெப்டைடுகளை, நீராற்பகுப்படைய செயலூக்கம் தரும், ஒரு புரதச் சிதைப்பு நொதி.

protein C : 'சி' புரதம் : குருதியுறை காரணிகள் 5 மற்றும் 8 ஆகியவற்றை செயலிழக்கச் செய்யும், திறன் வாய்ந்த உறை வெதிர்ப்பி.

proteinosis : புரதமிகை : திசுக்களில் அளவுக்கதிக புரதம் குவிந்திருத்தல்.

proteinuria : சிறுநீர்ப்புரதம்; புரத நீரிழிவு : சிறுநீரில் கருப்புரதம் இருக்கும் நோய்.

proteolysin : புரதச் சிதைவு; புரதப் பிளவு : புரதத்தின் செரிமானப் பிணைப்புகள் நீரால் பகுத்தல் மூலம் சிதைந்து பல சிறிய பிணைப்புகளாக உருவாதல்.

proteolyte : புரதச் சிதைவுப்பொருள் : புரதத்தைச் சிதைக்கும் பொருள்.

proteolytic enzymes : புரதச் சிதைவுச் செரிமானப் பொருள்கள் : புரதச்சிதைவை ஊக்குவிக்கும் செரிமானப் பொருள்கள் (என்சைம்கள்).

proteose : பிளவுக்கலவை : புரதங்களைப் பிளவுபடுத்தும் பொருள்களின் ஒரு கலவை. இது புரதத்திற்கும் பெப்டோனுக்கும் இடைப்பட்ட பொருள்களைப் புரதத்தைப் பிளவுபடுத்துகிறது.

proteus : அணூவுடலி : ஒழுகு உடல் உடைய அணு உயிரினம்; அடிக்கடி மாறும் இயல்புள்ள வயிற்றுடலி. இது உடலில், குடல் குழாயில் உடலுண்ணிகளாக வாழ்கின்றது. காயங்கள், சிறுநீர்க்குழாய் நோய்கள் போன்றவற்றில் நோய்க்குக் காரணமாக அமைகின்றன.

proto : முதல் : 1. முதல்நிலை குறிக்கும் இணைவார்த்தை 2. அதே தனிமங்கள் கொண்ட கூட்டுப் பொருள்களின் வரிசையில் கடைசியிலுள்ள ஒன்றைக் குறிக்கும் முன்னொட்டுச் சொல்.

protobiology : நுண்ணுயிரியல் : நுண்ணுயிர் வகைகளைப் பற்றிய படிப்பு சார்ந்த அறிவியல் பிரிவு.

protocol : ஆய்வின் படிநிலைக் குறிப்பு : ஒரு விசாரணைக்குப் பயன்படும் முறைகளின் விரிவான விளக்கம்.

proton : முன்னணு : எல்லா அணுக்களின் உட்கருவில் காணப்படும் நேர்மின்னேற்றத்துகள். ஒரு தனிமத்தின் அணு வெண்ணுக்கு ஈடான ஒரு அணுவின் உட்கருவிலுள்ள புரோட்டான்களின் (முன்னணுக்களின்) எண்ணிக்கை.