பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/917

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pump

916

Purkinje fibres


pump : எக்கி : 1. அழுத்தம் அல்லது உறிஞ்சல் மூலம் வளியங்கள் அல்லது நீரங்களை கட(செலு)த்தும் கருவி. 2 இதயம், இரத்தத்தை இரத்தக் குழாய்களுக்குள் செலுத்துவது போல, காற்று அல்லது நீரத்தை ஒரு பாதை வழியாக அழுத்தத்துடன் செலுத்தல்.

punch : துளைப்பி : ஒரு பொருள் அல்லது திசுவில் ஒரு சிறு வட்டத்துளை போட உதவும் கருவி.

punch-drunk : குத்துமயக்கம் : குத்துச்சண்டை வீரர்கள் போல, தலையில் ஏற்படும் பல் வேறு காயங்களால் ஏற்படும் நினைவிழப்பு நோய்க்குறித் தொகுதி.

punched out : துளையிட்ட : பல்மச்சைப் புற்றில் கதிர்ப் படத்தில், எலும்புகளில் துளையிடப்பட்டது போன்ற தோற்றம்.

puncture : துளை; கீறல்; கிழிசல்; துளையிடல் : கூர்மையான கருவியினால் ஏற்படுத்தப்பட்ட குத்துக்காயம். ஒரு திரவத்தை உட்செலுத்துவதற்காக உடலில் துளையிடுதல்.

PUO : காய்ச்சல் : காரணம் தெரியாத காய்ச்சல்.

pupil : கண்ணின் மணி / பாப்பா / பாவை : ஒளி புகுவதற்காக கண்ணின் விழித்திரைப் படலத்தின் மையத்திலுள்ள பாவை.

pupillary : கண்மணி சார்ந்த; பாவை சார்ந்த : கண்ணின் மணி தொடர்பான.

purgation : மிகு மல நீக்கம்; பேதி : மலக்கழிவு குடல் துப்புரவாக்குதல்.

purgative : பேதி மருந்து; பேதி ஊக்கி; மலமிளக்கி : குடல் இளக்க மருந்து மலத்தை வெளியேற்றிக் குடலைத் தூய்மைப்படுத்துகிற மருந்து.

purge : பேதி மருந்து; வயிற்றுப் போக்கு உண்டாக்கி : 1. பேதி மருந்து கொண்டு குடல் கழுவல் 2. குடல் கழுவப் பயன்படுத்தப்படும் (பேதி) மருந்து.

purine : பியூரின் : நைட்ரஜன் கொண்ட கூட்டுப் பொருள்களின் பெரும் தொகுதியில் ஒன்று. உணவிலுள்ள சில புரதங்கள் செரிக்கப்படும்போது இறுதியிலுள்ள பொருள்களாகும்; சிலவற்றை உடலே கூட்டியிணைத்து உண்டாக்குகிறது.

purity : தூய்மை : உடல் துப்புரவு.

Purkinje cell : பர்கிஞ்சி அணு : போலந்து நாட்டு, உடல் இயங் கியலாளர், ஜோகன்ஸ் பர்கிஞ்சியின் பெயரால் அழைக்கப்படும் சிறுமூளைப் புறணியிலுள்ள பெரும் நரம்பணு.

Purkinje fibres : பர்கிஞ்சி இழைகள் : கட்டுக் கிளைகளின்