பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/921

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pyretic

920

руrascupe


pyretic : காய்ச்சல் சார்ந்த : காய்ச்சலைத் தூண்டுகிற.

pyrexia : காய்ச்சல்.

pyridine : பைரிடின் : திசு நெய்வடிம மூலப்பொருள் வேதியியல் சோதனைக்கூடத்தில் பயன்படுத்தப்படும்.

pyridoxine : பைரிடாக்சின் : வைட்டமின்-பி என்ற உயிர்ச்சத்துப் பொருள். இது பூரிதமாகாத கொழுப்பு அமிலங்களுடன் அல்லது புரதங்களிலிருந்து பெறப்படும் செயற்கைக் கொழுப்புடன் சேர்த்துப் பயன் படுத்தப்படுகிறது. மசக்கையின் போது இது கொடுக்கப்படுகிறது.

pyriform : ஈட்டி உரு.

pyrimethamine : பைரிமெத்தமின் : முறைக் காய்ச்சல் (மலேரியா) நோய்க்கு எதிராகப் பெருமளவில் பயன்படுத்தப்படும் மருந்து குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.

pyrogen : காய்ச்சல் விளைவிக்கும் பொருள்; காய்ச்சலுக்கி : காய்ச்சல் உண்டாக்கக்கூடிய பொருள்.

pyrogenetic : காய்ச்சல் விளைவிக்கிற : காய்ச்சலுக்குரிய, காய்ச்சல் உண்டாக்குகிற உடல் வெப்பத்தை அதிகரிக்கிற.

pyrogenic : காய்ச்சல் சார்ந்த : காய்ச்சல் தொடர்பான.

pyrogenic contamination : காய்ச்சல் பொருளால் தூய்மைக்கேடு : காய்ச்சல் உண்டாக்கும் பொருளால் ஏற்படும் தூய்மைக் கேடு. சிரை வழி ஏற்றப்படும் திரவ மருந்துகளில் கலந்தால் காய்ச்சல் வரும்.

pyrogentest : காய்ச்சல் பொருள் சோதனை.

pyrolysis : வெப்பச் சிதைவு : (உடல்)வெப்ப நிலை அதிகரிக்கும் போது உயிர்ப்பொருட்கூறு அழுகல்.

pyromania : தீயிடுவெறி : தீவைக்க விரும்பும் கட்டுப்படுத்த முடியாத மனத்தூண்டல் கோளாறு.

pyrometer : வெப்பமானி : வெப்பத்தை அளக்கும் கருவி.

pyrrole : பிர்ரோல் : ஹீம் மற்றும் பார்ஃபைரின் ஆகியவற்றை கட்டும் பொருள்களை அளிக்கிற உடலில் காணப்படும் பல்அணு வளையப் பொருள்.

pyropericardium : இதய உறை சீழ்.

pyrascupe : காய்ச்சல் அளவி : சூடு செய்யப்பட்ட ஒரு பொருளின் வெப்பத்தை அதன் ஒளியைச்