பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

albumosuria

92

alcuronium


பொருள். ஆனால், இது வெப்பத்தினால் கட்டியாவதில்லை.

albumosuria : அல்புமோசூரியா : சிறுநீரில் அல்புமோஸ் இருக்கும் நோய்.

alcaligenes : அல்கலிஜீன்ஸ் : ஏ குரோம்போபாக்டீரிரேசியே எனும் குடும்பத்தைச் சேர்ந்த கிராம் நெகடிவ் பாக்டீரியா இனப்பிரிவு. இவை காண் பதற்கு கோல் போன்று இருக்கும். கோழியின் சிறு குடலிலும், மண்ணிலும் இவை காணப்படும்.

alcaptanuria : ஆல்கெப்டான் சிறுநீர்.

alcohol : ஆல்ககால்; வெறியம்; சாராயச் சத்து; மது : சர்க்கரைக் கலவைகளிலிருந்து வடித் தெடுக்கப்படும் வெறியச்சத்து. இயக்கம்-உணர்ச்சி- சுவை ஆகிய மூன்றையும் தூண்டுகிற நரம்பு வலி, மற்றும் அடங்காத வலி ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கு இது அரிதாக ஊசி மருந்தாகப் பயன்படுத் தப்படுகிறது. இயல்பு நீக்கிய ஆல்ககால் (90% ஆல்ககால்), 'டிங்சர்' என்ற சாராயக் கரைசல் மருந்து தயாரிக்கப்பயன்படு கிறது. 95% ஆல்ககால் கொண்ட மெதிலேற்றிய சாராயம், புறப் பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. நோவகற்றும் மருந்தாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

alcoholemia : இரத்தச் சாராய மேற்றல்.

alcohol fast : நிறம் நீக்கி : பாக்டீரியாவியலில், நிறங்கெடும் போது, ஆல்ககாலினால் நிறம் நீக்குவதை எதிர்க்கும் ஒர் உயிரி.

alcoholic : மது அடிமை; மது வயப்பட்ட.

alcoholism : மது அடிமைதனம்; மது வயமை; ஆல்ககால் நச்சுத் தன்மை; சாராய மயக்கம் : ஆல்ககாலுக்கு (போதைப் பொருள்) அடிமையாவதன் விளைவாக உண்டாகும் நச்சுத் தன்மை. இது முற்றிவிடும்போது, நரம்பு மண்டலமும், சீரண மண்டலமும் சீர் குலைகிறது.

alcoholization : மது மருத்துவம்.

alcoholuria : ஆல்ககாலூரியா; சிறு நீரில் சாராயம் : சிறுநீரில் ஆல்ககால் இருத்தல். ஆல்ககால் அருந்தியபின் ஊர்தி ஒட்டுவதற்குத் தகுநிலை உள்ளதா என்பதற்கான ஒரு சோதனைக்கு இது அடிப்படையாகும்.

alcopar : அல்கோபார் : பெஃபினியம் ஹைட்ரோக் சனாஃதோயேட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

alcuronium : அல்குரோனியம் : ஒரு செயற்கைத் தசைத் தளர் உறுத்துப் பொருள். இது 'டுயூபோகுராரின்' என்ற