பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/950

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

retroverted gravid..

949

Rheomacrodex


retroverted gravid uterus : பின் சாய்வுக் கருக்கொண்ட கருப்பை : பின்புறம் சாய்ந்து திரும்பிய கருக்கொண்ட கருப்பை.

retrovirus : ரெட்ரோ நச்சுயிர்; ரெட்ரோவைரஸ் : ரிவர்ஸ்டி ரான்ஸ் கிரிப்டேஸ் நொதி தன்னகத்தே கொண்ட ஒரு ஆர்.என்.ஏ. வைரஸ். ஒரு ஒம்பும் செல்லின் ஜீனோமுக்குள் நுழைந்து தனது சொந்த ஆர்.என்.ஏ.வை டி.என்.ஏ. ஆக மாற்றியமைத்து ஒம்பும் செல்லின் ஜீனோமோடு இணைந்து தனது மரபுவழிப் பண்புசார் செய்திகளை வெளிப்படுத்தல்.

revascularization : குருதிநாள மறுவளர்ச்சி : திசுவில் அல்லது உறுப்பில் இயல்பான இரத்தம் பாய்தல் தடைபட்டு, அந்தத் திசுவினுள் அல்லது உறுப்பினுள் இரத்த நாளம் மீண்டும் வளர்தல்.

reverse transcription : மாற்று படியெடுப்பு : வழக்கமாக டி.என்.ஏ தான் ஆர்.என்.ஏவாக மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால் இங்கு ஒரிழை ரெட் ரோவைரஸ் ஆர்.என்.ஏ. ஈரிழை டி.என்.ஏயாக ரிவர்ஸ்டிரான்ஸ் கிரிப்டேஸின் கிரியா ஊக்கி செயல்பாட்டால் பிரதியெடுக்கப்படுகிறது.

Reye syndrome : ஈர மூளை நோய் : மூளையில் ஈரக்கசிவும், பருத்த ஈரல் குலையும் உண்டாக்கும் நோய். இதில் மூளை நீர்க்கோவை ஏற்படுகிறது. ஆனால், கண்ணறை ஊடுருவல் ஏற்படுவதில்லை. ஈரல் குலையிலும், சிறுநீரகம் உட்பட மற்ற உறுப்புகளிலும் கொழுப்பு ஊடுருவிப் பரவுகிறது. இது சாலிசைலேட்டு மருந்து கொடுத்தல், சின்னம்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது.

rhabdomyolysis : இயக்குதசையழிவு : இயக்குதசை அழிபட்டு, இரத்தத்திலும், சிறுநீரிலும் மையோகுளோபின் (தசைப் புரதம்) தோன்றுதல்.

rhagades : உதட்டுத் தழும்புகள் : பிறவிக் கிரந்தி நோயின்போது உதடுகளில் ஏற்படும் நீண்ட தழும்புகள்.

rheology : ரியாலஜி : பொருள்களின் அமைப்புக் கோளாறு, ஒட்டம் ஆகியவற்றை ஆராயும் இயல்.

Rheomacrodex : ரியோமாக்ரோடெக்ஸ் : குறைந்த மூலக்கூற்று எடையுள்ள டெக்ஸ்ட்ரான் என்ற மருந்தின் வணிகப் பெயர். இது மாற்றிப் பொருத்திய சிரையில் குருதிக்கட்டைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.