பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/955

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Richter's hernia

954

ridge


அடர்படலம் செதிள்களாக உரிவதால் இந்த அரிசிக் குருணை வெளிப்படுகிறது.

Richter's hernia : ரிக்டெர் பிதுக்கம் : பிதுங்கிய ஒரு குடலின் சுற்றுவளைவுப் பகுதி நெரிக்கப்பட்டுள்ள நிலை. இது பொதுவாக தொடைப்பிதுக்கத்தில் நிகழ்கிறது. நோயாளிக்கு காற்றும் மலமும் பிரிவதால் இதைக் கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது. ஜெர்மன் அறுவை மருத்துவர் ஆகஸ்ட் ரிக்டெர் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

rickets : குழந்தைக்கணை; உயிர்ச்சத்துக் குறை நோய்; என்புருக்கி : குழந்தைகளுக்கு எலும்பு மென்மையடையும் நோய் வளர்சிதை மாற்றத்தில் கால்சியம், ஃபாஸ்பரம் குறைபாட்டினால் இது உண்டாகிறது. இது வைட்டமின்-டி உயிர்ச்சத்துக் குறைப்பாட்டுடன் தொடர்புடையது. ஆறு மாதம் முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இது ஏற்படுகிறது. இதனால் பளு தாங்கும் எலும்புகள் வளைந்து விடும், தலை வியர்க்கும், முறை நசிப்பு உண்டாகும்.

Rickettsia : நச்சுக் காய்ச்சல் நுண்ணுயிரி : நச்சுக் காய்ச்சல்கள் (சன்னிக் காய்ச்சல்கள்) உண்டு பண்ணும் ஒட்டுண்ணி நோய் நுண்ணுயிரிகள். இவை பாக்டீரியாக்களை விடச் சிறியவை; கிருமிகளைவிடப் பெரியவை. பல கீல்கால் அமைந்த உயிரினங்களின் குடல் நாளங்கள். இவை இயற்கையாக வாழ்கின்றன.

ricketsial diseases : கணைச் சூட்டு நோய்கள் : கணைச் சூட்டு வகையைச் சேர்ந்த நோய்கள்.

rickety : கணைச் சூட்டுக்குரிய : கணைச் சூட்டினால் பாதிக்கப்பட்ட

rickety rosary : கணைச் சூட்டு வீக்கம் : கணைச் சூட்டு நோய் (குழந்தைகளை) பீடிக்கப்பட்ட குழந்தைகளின் விலா எலும்புகளிலும், விலா எலும்பு சார்ந்த குருத்தெலும்புகளிலும் ஏற்படும் கடுமையான வீக்கம் அல்லது புடைப்பு (கொம்மை).

rictus : வெடிப்பு.

rider's bone : சவாரிக்கட்டி : குதிரைச் சவாரியின்போது தொடையில் திரும்பத் திரும்ப ஏற்படும் இலேசான காயத்திலிருந்து முன்னிழுக்கும் இயல் புடைய தசைநாரில் தோன்றும் எலும்பு போன்ற திரட்சி (கட்டி).

ridge : தண்டெலும்பு; நீண்ட முகடு.