பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/969

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

salpingian

968

salpingoplasty


salpingian : குழல்சார் : யூஸ்டேச்சியன் குழல் அல்லது ஃபெல் லோப்பியன் குழல் தொடர்பான.

salpingion : சால்பிஞ்சியான் : பொட்டெலும்பின் பொறைப் பகுதியின் மேல்முனையின் கீழ்ப்பரப்பில் உள்ளது.

salpingitis : கருக்குழாய் அழற்சி : அண்டப்பையிலிருந்து கரு முட்டை கருப்பைக்குக் கடத்தப்படும் குழாயில் ஏற்படும் கடுமையான வீக்கம்.

salpingo : சால்பிங்கோ : குழல் சார்ந்த எனும் பொருள் கொண்ட இணைப்பு வார்த்தை (வழக்கமாக ஃபெல்லோப்பியன் குழல் அல்லது சில சமயம் யூஸ்டேச்சியன் குழல்குறித்தது).

salpingocatheterism : குழாய்க்குள் குழல் செருகல் : யூஸ்டேச்சியன் குழாய்க்குள், குழல் செலுத்துகை.

salpingocoele : குழல் வீக்கம் : ஃபெல்லோப்பியன் குழலின் பிதுக்கத் துருத்தம்.

salpingocyesis : குழல் கர்ப்பம் : கருப்பைக்குழாயில் கருவளர்தல்.

salpingography : கருப்பைக் குழல் வரைவு : ஒரு எக்ஸ்ரே கதிர் ஊடுருவ வண்ண ஊடகத்தை ஊசிமூலம் செலுத்தி, கருப்பைக் குழல்களை கதிர்ப்படப் பரிசோதனை செய்தல்.

salpinogolithiasis : குழற்கல் : ஃபெல்லோப்பியன் குழாயில் கண்ண நீற்றுப்பொருள் தோன்றல்.

salpingolysis : குழல் விடுவிப்பு : ஃபெல்லோப்பியன் குழாய்க்கும் சுற்றியுள்ள திசுக்களுக்கும் இடையேயுள்ள தழும்புத் திசுவை அறுத்தெடுத்தல்.

salipingo-oophorectomy : கருக்குழாய்-கருப்பை அறுவை; அண்டக் குழல் கருப்பை (அண்டாசய) எடுப்பு : கருப்பையிலிருந்து கரு வெளியேறும் சுறுக்குக் குழாயையும், கருப்பையையும் வெட்டியெடுத்தல்.

salpingo-oophoritis : சினைப்பை-கருக்குழலழற்சி : ஒரு ஃபெல்லோப்பிய குழாய் மற்றும் ஒரு சினைப்பையழற்சி.

salpingo-oophorocoele : குழல் சினைப்பை வீக்கம் : ஒரு ஃபெல் லோப்பியன் குழாய் மற்றும் சினைப்பை கொண்ட பிதுக்கம்.

salpingopexy : குழல்நிலைப்பு : ஃபெல்லோப்பியன் (கருப்பை) குழலை அறுவை மூலம் நிலை நிறுத்தல்.

salpingopharyngeal : குழல் தொண்டைசார் : யூஸ்டேச்சியன் குழல் மற்றும் தொண்டை தொடர்பான.

salpingoplasty : குழற்சீரறுவை : பெண்களில் மலட்டுத்தன்மைக்