பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/972

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sane

971

sanity


மெலிவு நோயிலுள்ளது போன்று, முள்ளெலும்பு முளைத்தகடுகள் தடிமன் மிகுந்தும், உடற்பகுதி இயல்பான நிலையிலும் முள்ளெலும்பிடை வெளிகள் பாதுகாக்கப்பட்டிருத்தல்.

sane : நல்லறிவு : தெளிந்த மன நிலை.

sanguicolous : குருதியுறை : ஒரு ஒட்டுண்ணி போன்று, இரத்தத்தில் உறையும்.

sanguifacient : இரத்த வளர்பொருள் : இரத்தச் சிவப்பணுக்கள் உருவாக்கத்தை மேம்படுத்தும் பொருள்.

sanguiferous : குருதிகொள் : இரத்தத்தைக் கொண்ட அல்லது கொண்டு செல்லும்.

sanguinariness : குருதிச்சோர்வு : இரத்தம் மிகுதியாகக் கசிந்து சிந்துவதால் உண்டாகும் சோர்வு.

sanguine : மிகைக் குருதி நோய் : இரத்தம் மிகையாக இருப்பதால் ஏற்படும் கோளாறு.

sanguineous : குருதி சார்ந்த; செந்நீரிய : இரத்தம் சார்ந்த, இரத்தம் உடைய குருதி மிகைக் கோளாறுடைய.

santonin : எட்டி எண்ணெய் : எட்டி மரத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். ஒரு சமயம் உருண்டைப் புழுவுக்கு (நாக்குப்பூச்சி) எதிராகக் கொடுக்கப்பட்டது.

saponification : சவர்க்காரமாக்கல் : காரங்களுடன் சேர்த்துக் சூடாக்குவதன் மூலம் சவர்க்காரமாகவும் கிளிசெராலாகவும் மாற்றுதல்.

sanguinopurulent : குருசீழ்க் குருதியை : இரத்தமும் சீழும் கொண்ட.

sanguisuga : குருதியுறிஞ்சி; இரத்தம் உறிஞ்சி : ஒரு அட்டை அல்லது இரத்தம் உறிஞ்சி.

sanitarian : சூழல் தூய்மையாளர்; துப்புரவல்லுநர்; துப்புரவாளர் : நலவாழ்வுப் பயிற்சியாளர் துப்புரவு மற்றும் பொது சுகாதாரத்தில் பயிற்சி பெற்ற ஒருவர்.

sanitary : துப்புரவு; நலவாழ்வு சார் : 1. உடல் நலம் மேம்படுத்தும் அல்லது தொடர்பான 2. அழுக்கில்லா சுத்தமான உடல் நலத்துக்கு உகந்த.

sanitation : சுகாதாரம் : நலவாழ்வுக்கு குறிப்பாக பொது சுகா தாரத்துக்கு ஏற்பான சூழ்நிலைகளை ஏற்படுத்துதல்.

sanitiser : தூய்மையாக்கி : கிருமித்தாக்க எண்ணிக்கையை பாதுகாப்பான அளவுக்குக் குறைக்கும் ஊடகம்.

sanity : மனநலம் : மனம், உணர்வுகள் மற்றும் நடத்தை நல்ல நிலையிலிருத்தல்.