பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/985

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sclerocorneal

984

sclerotherapy


sclerocorneal : விழி வெண்படலம் கருவிழி சார்ந்த : விழி வெண்படலம், கருவிழி ஆகிய தொடர்புடைய.

scleroderma : கெட்டிமேல்தோல்; இணைப்புத் திசுக் கடினமாதல் : கடினமான மேல் தோல் நோய். இதனால், தசை இயக்கம் குறையும், விரல்கள் சுருங்கிவிடும்.

scleroma : இழைமக் காழ்ப்பு : இழைமக் காழ்ப்புக் கோளாறு.

scleromeninx : மூளையுறை : மூளை, தண்டுவடம் ஆகியவற்றை முடியிருக்கும் சவ்வுறை.

scleromere : இறுக்க என்பு :எலும்புக்கூட்டின் முள்ளெலும்புத் துண்டு போன்ற ஒரே மாதிரியான துண்டுப்பகுதி.

scleromyxedema : தடிசீதச்சவ்வு வீக்கம் : கொப்புளங்களின் அடியில் தோல் தடித்து சீதச்சவ்வு வீக்கம்.

scleronyxis : நகக்காழ்ப்பு : நகங்கள் தடித்து இறுகியிருத்தல்.

sclerophthalmia : விழிவெணபடலநோய் : விழிவெண்படல ஒளிபுகாநிலை பளிங்குப் படலத்துக்கும் பரவி, அதில் சிறு நடுப்பரப்பு மட்டும் ஒளிபுகும், பிறவிக் கோளாறு.

scleroprotein : காழ்மப்புரதம் : கரையா உள்ளமைப்புப் பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்த புரதம்.

sclerosant : காழ்ப்பூட்டுபொருள் : சிரை நாளச் வீக்க சிகிச்சையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள். இதை சிரைக்குள் ஊசிவழியாக செலுத்தும் போது, அழற்சியுண்டாக்க இறுதியில் நார் மிகுந்து உள்ளிடத்தை முடிவிடுகிறது.

sclerosis : அணும உள்ளரிக் காழ்ப்பு; நுரையீரல் கடினமான : ஒரு திக அளவுக்குமீறிக் கெட்டிப்படுதல் அல்லது வீக்கமடைதல்.

'scleroskeleton : தசையெலும்பாக்கம் : தசை நார்கள் எலும்பு போல் காழ்ப்புடையதாகுதல்.

scierostenosis : காழ்மக்குருக்கம் : குறிப்பாக ஒரு துளையைச் சுற்றியுள்ள திசுக்கள் இறுகிக் குறுக்குதல், சுருக்குதல்.

sclerostomy : விழிவெண்படல துளைப்பு : கண்மிகை அழுத்த நோய்க்கு மருத்துவம் செய்ய விழி வெண்படலத்தில் அறுவை மூலம் துளை செய்தல்.

sclerotherapy : இழைம நாளக் காழ்ப்பு மருத்துவம் : மூலநோய் அல்லது விரிநாளச் சிரைகளுக்கு மருத்துவம் செய்ய காழ்ப்பூட்டு பொருளை ஊசிவழி செலுத்தல்.