பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/984

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

scintigraphy

scleritis


கள் வடிப்பதால் கீழ்ப்பெருஞ் சிரை, ஒரு வளைந்த (கொடுவாள் வடிவ) ஒளிப்பட உருவமாக, வலது இதய ஒரத்துக் கருகில் தோன்றுவது.

scintigraphy : கதிரொளி வீச்சு வரைவு : கதிர்ப்பட மருந்து கொண்டு உருவம் காணும் ஊடகத்தை உட்செலுத்தி கதிரியக்கப் பரவலின் இருபரி மான உருக்கள் தோன்றுவது.

scintillation : ஒளிவீச்சு : 1. ஒளிவீச்சு அல்லது ஒளிப்பொறியை ஒருவர் உணர்தல், 2. ஒரு படிக அல்லது நீர்ம கதிர்வீச்சு கண்டறி கருவியால் உள்ளேற்கப்படும் எக்ஸ் அல்லது காம்மா கதிர் வெளியிடும் ஒளி.

scintiscan : ஒளிவீச்சு பதிவுருள் : உட்செலுத்தப்படும் கதிர்வீச்சு மருந்துப்பொருள் பரவியிருப்பதை ஒளிப்படமாகக் காட்டும் துருவுபடப் பதிவு.

scintiscanner : ஒளிவீச்சு துருவு படக்கருவி : ஒளிவீச்சு பதிவு காட்டப் பயன்படும் கருவி.

scirrhus : நார்தசை கடினப்பட்ட; மகோதரம் : மார்பகத்தின் கடின மான புற்றுநோயின் திண்மையான இணைப்புத் திசுவில் கணிசமாக ஏற்படும் புற்று வளர்ச்சி.

scissor leg deformity : கத்தரி கால்; முட்டிக்கால்; கத்தரி நடைமுடம் :நடக்கும்போது கால்கள் கத்திரிபோல் குறுக்கே செல்லும் உருத்திரிபுக் கோளாறு இது இரட்டை இடுப்பு முட்டு நோயினால் உண்டாகிறது.

sclera : விழி வெண்படலம்; வெள்விழி : வெண்விழிக் கோணத்தின் புறத்தோல். இது கருவிழிப்படலத்தின் முன்புறம் இணைகிறது.

sclerectomy : விழி வெண்படல நீக்கம் : விழிவெண்படலத்தின் ஒரு பகுதியை அறுத்து நீக்குதல்.

scleredema : இறுக்க நீக்கம் : ஒரு தீடீர்தொற்றினால் தோன்றும் வீக்கமும் தடிப்பையும் காட்டும் நிலை.

sclerema : விழி வெண்படலக் காழ்ப்பு : விழி வெண்படலத்தின் தோல், சவ்வுப் பொருள் படிவதால் கடினமடைதல்.

scieroblastema : உள்ளரிக் காழ்ப்பு அணு : கருத்திசுவிலிருந்து எலும்பு உண்டாதல்.

scleromalacia : விழிவெண்படல நலிவு : விழிவெண்படலம், திசுவழிந்து மென்மையாதல்.

scleriasis : காழ்ப்பு நோய் : இழைமக் காழ்ப்புக் கோளாறு.

scleritis : விழிவெண்படல அழற்சி : விழி வெண்படலத்தில் ஏற்படும் வீக்கம்.