பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/994

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

septal abdess

993

serial passage


சீழ் உண்டாக்கும் உயிரிகளினால் ஏற்படும் சீழ் நச்சு.

septal abcess : பிரிப்புச் சுவர்க்கட்டி; இடைச் சுவர்க்கட்டி.

septan : வார (காய்ச்சல்) : ஏழு நாட்களுக்கு ஒருமுறை (வருகிற காய்ச்சல்).

septic : நச்சூட்டுப்பொருள்; நுண்ணுயிர் மடிவு : அழுகச் செய்யும் ஊறு நச்சு.

septic tank : நச்சுத்தடை மலக் குழி; அழுகு தொட்டி.

septicemia : குருதி நச்சூட்டு : குருதியோட்டத்தில் உயிர் வாழும் நோய்க் கிருமிகள் பெருக்கமடைதல்.

septoplasty : பிரிசுவர் சீரறுவை : மூக்குப் பிரிசுவர் மறுசீரமைப்பு அறுவை.

septostomy : பிரிசுவர்துளைப்பு : பிரிசுவரில் ஒரு துளையை அறுவை சிகிச்சையில் உண்டாக்குதல்.

septum : பிரிப்புச்சுவர்; இடைத் தடுப்பு; பிரிதிசை; இடைச்சுவர்; தடுப்பு : உறுப்பிடைத் தடுக்கு, எடு: மூக்கின் இருதுளைகளின் இடைப்பகுதி.

sequela : நோய்ப்பின்தளர்ச்சி; நோய்த் தாக்கம் பின் விளைவு : நோயின் பின் விளைவாக உண்டாகும் தளர்ச்சி நிலை. எடு: அம்மை நோயினால் ஏற்படும் தழும்பு.

sequestrant : ஒதுக்கற்பொருள் : சிறுகுடலில் பித்த அமிலங்கள் உள்ளுறிஞ்சலைத் தடுத்துக் கட்டும், கோலிஸ்டிரமின் போன்ற ஒதுக்கப்பொருள்.

sequestration : பிரித்து ஒதுக்கல் : 1. சூழ்ந்துள்ள நல்ல திசுக்களி லிருந்து பிரிக்கப்பட்ட பகுதி. 2. சுழலோட்டத்தில் கலந்து கொள்ளாத இரத்த அல்லது அதன் நீரஇழப்பு.

sequestrectomy : இற்ற எலும்பு அறுவை; ஒதுக்கெடுப்பு : எலும்புக்கூட்டுத் தொடர்பற்று இற்றுப்போன எலும்பினை வெட்டியெடுத்தல்.

sequestrum : இற்ற எலும்பு; மடிந்த எலும்புத் துண்டு; ஒதுக்க எலும்பு; துண்டெலும்பு : எலும்புக் கூட்டுடன் தொடர்பற்று இற்றுப்போன எலும்பு.

sequoiosis : செக்குவோவின் நிலை : செம்மரத்தூள் போன்ற வெளிப்பொருள் ஒவ்வாமையால் ஏற்படும் (துரையீரல்) நுண்ணறையழற்சி.

serial passage : வரிசையாய் செலுத்துகை : ஏமக்காப்பு திறன் இருக்க வைத்து, உயிரியின் தீவிரத்தை மட்டுப்படுத்த, நோயுண்டாக்கும் உயிரியின்