பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/993

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sensitization

992

sepsis


sensitization : கூருணர்ச்சிப்பாடு : உணவு, பாக்டீரியா, தாவரங்கள், வேதியியல் பொருள்கள், மருந்துகள், ஊனீர் முதலியவற்றுக்கு ஒருவர் கூருணர்வுடையவராக இருக்கும்படி செய்தல்.

sensorineural : உணர்ச்சி நரபணு : உணர்ச்சி நரம்பணுக்கள் தொடர்புடையது. உணர்ச்சி நரம்பணுச் செவிடு என்பது நரம்புச் செவிடு எனப்படும்.

sensorium : உணர்வு மையம் : 1. உணர்ச்சி உறுப்பு. 2. உள்ள நினைவுநிலை.

sensory : உணர்ச்சி சார்ந்த நரம்பு : மூளைக்கும் முதுகந்தண்டுக்கும் தூண்டல்களைக் கொண்டு செல்லும் நரம்புகள்.

sensory (sensorial) : உணர்ச்சி மண்டலம் சார்ந்த; புலன் சார்; உணர் : உணர்வு மண்டலம் தொடர்புடைய முளை பற்றிய, புலன்கள் சார்ந்த.

sensory nerve : உணர்ச்சி நரம்பு; உணர் நரம்பு; புலன்சார் நரம்பு.

sensual : புலன்சார் : புலன் சார்ந்த இன்ப உணர்வு கொண்ட அல்லது தொடர் புடைய.

sentiment : உணர்ச்சி ஆர்வம்; பாச உணர்வு : சில ஆட்கள் அல்லது பொருள்களின் மீது உள்ள உணர்ச்சி பூர்வமான பற்றார்வம். இது சுற்றுச்சூழல் அனுபவத்தால் அதிகமாகிறது.

sentineal clot : காவல் உறைக் கட்டி : ஒட்டியுள்ள குருதியுறை கட்டி அல்லது இரைப்பை சிறுகுடல் மேற்பகுதி உள்நோக் கயில் காணப்படும் வயிற்றுப் புண் பகுதியில் நன்கு தெரியும் குருதி நாளம்.

sentinel loop : காவல் வளையம் : திடீர் கணைய அழற்சியில், இரைப்பைக்குடல் மேற்பகுதி கதிர்ப்பட வரிசையில் காணப்படும், இடைச்சிறு குடலின் விரிந்த பகுதி.

sentinel node : வாயில் காவல் கணு : 1. இரைப்பைப்புற்று நோயில் சேய்மத் தாக்கத்தால், ஒரு தனியான பெரிதான இடது காறையெலும்பின் மேல் நிணக் கணு இருப்பது, கட்டி-அறுத்து நீக்க முடியாத நிலையை காட்டுகிறது. 2. பித்தப்பை பொதுபித்த நாள சந்திப்பில் உள்ள பித்தப்பை நிணநீரை வடிக்கும் நிணக்கணு.

sentinel pile : வாயில் மூலம் : நாட்பட்ட குதப்பிளவின் கீழ் முனையிலுள்ள தோல்துண்டு.

sepsis : சீழ்த்தொற்று; குருதியில் நுண்ணுயிர் நஞ்சேறுதல்; சீழ்ப்பிடிப்பு; சீழ்மை : காயத்தில்