பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/997

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sexduction

996

Shahade...


sexduction : பாலினக்கடத்தல் : ஒரு உயிரணுவிலிருந்து மற் றொன்றுக்கு பாலினக் காரணகளால் நுண்ணுயிர் மரபணு மாற்றச் செயல்முறை.

sex instinct : பாலுணர்வு : பால் இயல்யூகம்.

sexology : பாலியல் : பால் மற்றும் பாலினம் பற்றிய அறிவியல் படம்.

sexuality : பாலினத்தன்மை: பாலின வளர்ம வெளியிடு இயக்குநீரின் விளைவாக, இனப்பெருக்க ஆற்றல் மற்றும் மனிதப் பாலின வினைச் செயல் திறன்.

sezary cell : செஜாரி உயிரணு : பிரெஞ்சு தோல் மருத்துவர் ஏ.செசாரியின் பெயர் கொண்ட, ம்யூக்கோபாலி சேக்கரைடுகள் நிறைந்த பல நீரறைகள் கொண்ட டீ நினவணு.

sezary tumour : செசாரிக்கட்டி : டீ தோலின் நின அணுக்கட்டி.

sex urge : பாலுணர்ச்சி வேகம் : இணை விழைச்சு எழுச்சி.

sex linked : பாலின மரபணுக்கள் : பாலின இனக்கீற்றுகளில் அல்லது குறிப்பாக எக்ஸ் இனக்கீற்றுகளில் (குரோமோசோம்) காணப்படும் மரபணுக் களைக் குறிக்கிறது. இவை இப்போது எக்ஸ் இனக்கீற்றுகள் எனப்படுகின்றன.

sexual reproduction : கலவி இனப்பெருக்கம்; பால் சார் இனப்பெருக்கம் :ஆண் பெண் கலவி மூலம் உண்டாகும் இனப்பெருக்கம்.

sexually transmitted disease : பாலுறவு நோய்கள் : பாலுறவு மூலம் பரவும் நோய்கள். முன்பு இவை மேக நோய்கள் என அழைக்கப்பட்டன.

shaft : தண்டு : நீள எலும்பிலுள்ள இருகுருத்து முனை களுக்கிடையேயுள்ள ஒரு நீண்டகம்பு போன்ற அமைப்பு.

shagreen patch : மெருகுத்தோல் பத்து : குதிரைகளின் தோலிலிருந்து தயாரிக்கப்படும் பதனிடப்படாத தோலுக்கு ஒப்பிடப்படும், சதை நிறம் பெற்ற தடிமனான, முதுகிலும், கீழ்முதுகுத் திரிகப் பகுதியிலும் கொப்புளங்கள் நிறைந்துள்ள டியூபெரஸ் ஸ்கிளிரோசிஸ் நோய்.

Shahade-Shah technique : ஷா மற்றும் ஷா நுட்ப முறை : இந்திய அறுவை மருத்துவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முறையில், பூப்பு மேற்பகுதிக்குள் சிறுவிரலைச் செலுத்தி அதனையொட்டி ஒரு உலோ கக்குழலை, கிழிந்த சிறுநீர்த் தாரைக்குள் (குழல்) செருகும் முறை.