176
மருத்துவ விஞ்ஞானிகள்
உரிமை சீர்த்திருத்தங்கள், வீரச் செயல்கள், கலைத் துறை வளர்ச்சிகள், அறிவியல் துறைகளில் எண்ணற்றோர் தோன்றி அவரவர் உழைப்புகளை, சிந்தனைகளை தியாகம் செய்திருக் கிறார்கள்.
ஃபிரான்ஸ் நாட்டின் அந்த மா மேதைகளில் எல்லாம் “யார் மிகச் சிறந்தவர்கள்” என்ற மக்கள் வாக்கெடுப்பு நடைபெற்ற தில்லை.
ஆனால், லூயி பாஸ்டியர் ஒருவர்தான் ஃபிரான்ஸ் நாட்டிலேயே மிகச் சிறந்தவர் என்று மக்கள் தங்களது வாக்கெடுப்புகள் மூலம் அறிவித்திருக்கிறார்கள் என்றால், என்ன பொருள் இதற்கு? செயற்கரிய சான்றாண்மை அல்லவா?
லூயி பாஸ்டியர் தனது நோய் எதிர்ப்புப் போர் மூலமாக மக்கள் நெஞ்சிலே நிலைத்து நின்று விட்டார் என்பது பொருள் அல்லவா? இதைவிட வேறு மக்கள் புகழ் என்ன வேண்டும் ஒரு மனித நேய மேதைக்கு?
உலக நாடுகளிலே வேறு எந்த மா மேதைக்காவது, அல்லது ஃபிரான்ஸ் நாட்டிலேயே வேறு எந்த மேதைக்காவது, இப்படிப்பட்ட ஒரு மக்கள் வாக்கெடுப்பு பணி நடந்ததுண்டா.
வாழ்க! லூயி பாஸ்டியரின் அறிவியல் தொண்டுகள் வளர்க அவரது மனித நேயச் சேவைகள்.
★★★