பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

81


இந்திய நாட்டை அடிமையாக்கி ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்கள்; இந்தியாவிலே தோன்றும் காலரா, பிளேக் மலேரியா, அம்மை நோய்கள் ஆகியவற்றைக் கேள்விப்பட்டு, அதன் தாக்குதல்களைக் கண்டு அஞ்சியே வாழ்ந்து. அதற்கான மருத்துவ சிகிச்சைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி, தங்களையும் இந்திய மக்களையும் காப்பாற்றியவர்கள் ஆவர்.

படைபலம் கொண்ட நாட்டார் கூட மலேரியா காய்ச்சலைக் கண்டு நடுங்கியே வாழ்ந்திருக்கிறார்கள் என்றால், அந்த நோய் எவ்வளவு கடுமையாக இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய நோய்களுள் ஒன்று.

கிரேக்கர்களும், ரோமானியர்களும், ஆப்பிரிக்க நாட்டினரும், இங்கிலாந்துக்காரர்களும், பிரெஞ்சு நாட்டினரும் மலேரியா, காலரா, அம்மை போன்ற நோய்களால் அவதிப்பட்டு வாழ்ந்திருக்கிறார்கள்.

மஞ்சள் காமாலை நோய், சீனர்களையும், ஜப்பானியர் களையும் எரிமலை போல பூகம்பம் போல பயமுறுத்திக் கொண்டே இருந்தது.

மலேரியா, காலரா, போன்ற நோய்கள், ஈக்களாலும், கொசுக்களாலும் தான் நாட்டில் தோன்றிப் பரவுகின்றன. கொசுக்கள் எங்கே அதிகமாக வாழ்கின்றதோ, அங்கே எல்லாம் மலேரியா என்ற கடுங் காய்ச்சல் தோன்றும் என்ற உண்மையை முதன் முதலாகக் கண்டறிந்தவர் டேவிட் லிவிங்ஸ்டன் என்பவரே ஆவார்.

சாக்கடை நீர்த் தேக்கங்களிலும், அசுத்த தண்ணீரிலும், ஏரிக் கரையிலும், ஆற்று முகத்துவாரங்களிலும், கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகும் என்பதையும்; லிவிங்ஸ்டன் தான் கண்டுபிடித்தார். எனவே, பெரும்பாலும் சதுப்பு நிலப்பகுதிகளில் தான் கொசுக்கள் பிறக்கும் - வாழும் என்றும் அவர் கூறினார்.

மூட நம்பிக்கைகளை அதிகமாகப் பின்பற்றி வந்த மக்கள், மலேரியா நோயை ஒரு மாய நோய், தெய்வக் குற்றத்தால் வரும் தொற்றுநோய் என்று நம்பி, அதற்கான தெய்வ வழிபாடுகளையும் செய்து வந்த ஒரு காலமும் இருந்தது.