பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

89


எனவே, தனது ஆராய்ச்சியினால், கொசுக்களில் ‘கிரே சலர்’ கொசு என்றும், ‘கடி வாளம்’ உள்ள கொசு ஒரு வகை என்றும், இரு வகையான கொசுக்கள் உயிர் வாழ்வதாக உணர்ந்தார் ரோஸ்!

கொசுக்களைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்த ரோஸ், அதனுடன் தொடர்பான, கொசுக் கடிகளால் உருவாகும் ‘மலேரியா’ என்ற கடும் காய்ச்சல் நோயையும் கண்டுபிடித்தார் அவர். மருத்துவத் துறையை வெறுத்து வந்த ரோஸ், தனது தந்தையின் கண்டிப்பால் மருத்துவத் துறையில் ஈடுபட்ட ரோஸ், இப்போது தனது முழு உணர்ச்சியால் அவரே கொசு அழிப்பு வேலையில் மும்முரமாக இறங்கி விட்டார்.

கொசு உடலில் கரும்புள்ளிகள்!

பிரெஞ்சு இராணுவ மருத்துவராக அப்போது இருந்த ‘அல்போன்சேலாவன்’ என்பவர், 1878-ஆம் ஆண்டில், ‘மலேரியா நோய் கண்ட மனிதனுடைய ரத்தத்தில் சில கரும்புள்ளிகள் இருக்கின்றன. இந்தக் கரும்புள்ளிகளே மலேரியா நோய்க்குக் காரணம்’ என்பதைக் கண்டுபிடித்துக் கூறியிருந்தார்.

‘இந்தக் கரும்புள்ளிகளால் உற்பத்தியாகி, உடல் முழுவதும் பரவி மலேரியா என்ற நோய் உற்பத்தியாக்குகிறது’ என்றும் - அந்த பிரெஞ்சு மருத்துவர் கூறியதையும் ரோஸ் படித்தார்.

இந்தக் கரும்புள்ளிகள் மனித உடலில் எப்படி உருவாகிறது? உண்ணும் உணவின் நேரத்திலா? அல்லது தண்ணீரைக் குடிக்கும் பொழுதா? என்று சர்ச்சை ஏற்பட்டது. மலேரியா நோய் வந்தவன் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுவதை, மற்றவர்கள் சுவாசிப்பதால் உடலின் உள்ளே பரவுகிறதா?

கொசுப் பூச்சிகளின் கடியினால், ரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் பரவுகின்றதா? போன்ற மருத்துவ உலகின் கேள்விகளுக்கு ரோஸ் விடை காண விரும்பி, அவற்றை ஆராய்ச்சி செய்ய உழைத்தார்.