பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெல்லை சங்கரலிங்க முதலியாரின் "ஜூபிலி தமிழ்ப் பேரகராதியில் உள்ளவை

ஆணாய்ப் பிறந்தோன் =ஆவாரைச் செடி இது. இதன் பெயர்க்காரணம் தெளிவாய்த் தெரியவில்லை. பின்வரும் காரணம் ஒரளவு பொருந்தலாம். மக்களுள் பெண்களினும் ஆண்கள் உருவத்தில் உயர்ந்தவர்கள். அதுபோல, செடிக ளுக்குள் ஆவாரை ஓரளவு உயர்ந்த செடி எனலாம். இது நன்கு வளர்ந்து பதினாறு அடி உயரங்கூட இருக்கும். இக் காரணத்தால், இது ஆணாய்ப் பிறந்தோன் எனும் பெயர் பெற்றிருக்கலாம். வடிவம்.

ஆளையடிச்சான்: புளியஞ்சிம்பு ஒடியாதது; வளைந்து கொடுக்கக்கூடியது; உறுதியானது. இதனால் ஆளையடித் தால் தப்பமுடியாது; வலி மிகுதி - எனவே, ஆளையடித்து வருத்துவதற்கு ஏற்ற புளியமரம் ஆளையடிச்சான் எனப் பட்டது. சார்பு.

இந்திராணி கை: இது நொச்சிமரம். இந்திராணி = இந்திரன் மனைவி. நொச்சி ஐந்திலைகளைக் கொத்தாக உடைய மரம். கைவிரல்களும் ஐந்துதானே! இந்திராணி கை அழகாக இருக்கும். இந்திராணி கை போன்ற அழகிய ஐந்திலைக் கொத்துடைய நொச்சி வடிவால் இந்திராணி கை எனப்பட்டது. -

உச்ச தரு : உச்சம் = உயரம்; தரு = மரம். தென்னை உயரமான மரமாதலின் இப்பெயர் பெற்றது. உயரமாய்