பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 113

இருப்பவரைப் பார்த்துத் தென்னைமரம் போல் வளர்ந்து விட்டார் எனல் வழக்கம். வடிவம்.

உலகம் காத்தான்: இது அவுரிச்செடி. அவுரி இலையி லிருந்து நீலம் - நீலக் கட்டி உண்டாக்கப்படுகிறது. நீல நிறத் திருமால் உலகைக் காக்கும் (காத்தல்) கடவுள். எனவே, அவுரிக்கு உலகம் காத்தான் எனும் பெயர் ஏற்பட்டது. நிறம்.

கடலடைத்தான்: அபினி, கஞ்சா ஆகியவை இப்பெயர் பெற்றுள்ளன. கடல் தாண்டி - ஒரு நாடு விட்டு இன்னொரு நாட்டிற்கு அனுப்பும் வணிகம் அரிது. இது குறித்து, தமிழ்க் கலைக் களஞ்சியம் - முதல் தொகுதியிலுள்ள ஒரு தொடர் அப்படியே வருமாறு:

'அபினி வியாபாரம், புழங்குதல் முதலியவை குறித்து எல்லா நாடுகளிலும் கண்டிப்பான சட்டங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன’’

இதனால், அபினி - கஞ்சா ஆகியவை கடலடைத் தான்’ என்னும் பெயர் பெற்றிருக்கலாமோ! சார்பு.

கண்டக பலம்: கண்டகம் = முள்; பலம் = பழம். பலாப்பழத்தின் மேலே முள் போன்ற உறுப்பு நிறைய இருப்பதால் இப்பெயர்த் தாயிற்று. வடிவம்.

கப நாசனி: இது தேற்றான் மரம். கபத்தைப் போக்கு வதால் இப்பெயர்த்து. பயன். அ.கு.பா. பாடல்:

" தேற்றான் கனிதனக்குச் சேயிழையே, வண்காசம்'

தோற்றாது ஒழியும்; சுவாசமும் போம்’

காசம், சுவாச இரைப்பு = ஆகியவை கபத்தைக் குறிக்கும்.