பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 119

சுருங்கி : தொட்டால் சுருங்கும் தொட்டால் சிணுங்கி’ இது. வடிவம்.

சுவர்ண வர்ணன். சுவர்ணம் = பொன், மஞ்சள் பொன் வர்ணம் (நிறம்) உடையதாதலின் சுவர்ண வர்ணன்

J த

எனப்பட்டது. நிறம், வடிவம்.

சுள்ளி வேகன் சுள்ளுதல் என்றால் உறைத்தல். "அப்பாடா! இந்தக் குழம்பு சுள்ளென உறைக்கிறது” என்று கூறக் கேட்டிருக்கலாம். சுள்’ என்பது ஒரு சுவைக் குறிப்புச் சொல். மிளகாய் சுள்ளென உறைப்பது; உண்டார்க்கு ஒருவகை வேகம் = விருவிருப்பு தருவது. ஆதலின் 'சுள்ளி வேகன்” எனப்பட்டது. பயன்.

சூதவைரி: சூதக் கட்டத்தைப் போக்குவதால், விலைக் குருந்து, சூதவைரி எனப்பட்டது. பயன். மூ ருந்து, கு

சூரியமணி: சூரியகாந்தி. வேறோரிடத்தில், விண்மணி எனச் சூரியன் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். சூரியமணியாகிய ஞாயிறை நோக்கித் திரும்புவதால், சூரிய காந்தி சூரியமணி எனப்பட்டது. சார்பு. சூரியகாந்திக்கு 'நேரங்காட்டி என்னும் பெயரும் உண்டு. எனவே, சூரிய காந்திப் பூ, சூரியன் பக்கம் சாய்ந்து, சூரியன் உதவியால், மக்கட்கு மணி (நேரம்) அறிவிப்பதால் சூரிய மணி எனப் பட்டது என்றும் கூறலாம்.

செத்தல்: உலர்ந்த இலைச் சருகுகளைச் செத்தை எனக் கூறுவதுண்டு. அதுபோல, உலர்ந்த தேங்காயை அதாவது, கொப்பரை வேறு கொட்டாங்கச்சி வேறு எனப் பிரித்துப் பார்க்கும் அளவுக்கு உலர்ந்த தேங்காயைச் 'செத்தல்’ என்றனர். உடற்கூறு.

செந்து நாசனம்: செந்து = அஃறிணை உயிரிகள், சிறுசிறு உயிரிகள், பெருங்காயம் செந்துக்களைக் கொல்லு