பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 149

கொல்லவும் செய்யாமலும், வாழவும் செய்யாமலும் அப் புழு வருந்தும்படியாக நடந்து கொள்வர் என்னும் பொருளில், சமண னிடம் அகப்பட்ட சீலைப் பேனைப் போல - என்று வழங்கப்படும் பழமொழி ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. சார்பு.

சனார்த்தனம்: சுக்கு இது. காத்தல் கடவுளாகிய திருமாலுக்குச் சனார்த்தனன் என்னும் பெயர் உண்டு, காத்தல் கடவுள்போல் சுக்கு மக்களைக் (சனங்களைக்) காத்தலின் இப்பெயர்த்து. பயன்-ஒப்புமை,

சாம்ப சதாசிவம்: சிவனார் வேம்பு இது. சிவனுக்குச் சாம்ப சதாசிவம் என்னும் பெயர் உண்மையால், சொல் விளையாட்டாகச் சிவனார் வேம்பு இப்பெயர்த் தாயிற்று.

சிங்காரம் ஏல அரிசி இது, சிங்காரம் என்பதற்கு அணி (அலங்காரம்)-இனிமை என்னும் பொருள் உண்டு. ஏல அரிசி ஆடம்பர அலங்கார உணவுக்கு உதவுகிறது. மற்றும், ஏல அரிசியிட்ட உணவு இனிமையாயுள்ளது. எனவே இப்பெயர்த்து, பண்பு-பயன்.

சுகுமாரம்: இது ஒருவகைக் கரும்பின் பெயர். சு = நல்ல ; குமாரம் = பிள்ளைமை : சுகுமாரம் = நலம் செய்யும் பிள்ளைமைப் பொருள். கரும்பு இத்தகைய தாதலின்

இப்பெயர் பெற்ற தெனலாம். பண்பு.

தனவஞ்சன்: இது கொட்டைப் பாக்கு. தன வஞ்சன் என்றால், செல்வத்தை வஞ்சகமாய் மறைப்பவன் என்று பொருள் செய்யலாம். கொட்டைப் பாக்கு என்பது பாக்கு மரத்தின் காயாகும். பெரும்பாலும் மற்ற மரங்களில் பூவும் அதிலிருந்து தோன்றும் காயும் தொடக்கத்திலிருந்தே நன்றாக - வெளிப்படையாகத் தெரியும். ஆனால், கொட்டைப் பாக்கு, ஒரு பாளைக்குள் மறைந் திருக்கும்.