பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மர இனப் பெயர்கள்

இனித்த முடைய எடுத்தபொற் பாதமும்,

காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த

மாநிலத்தே' -

இப்பாடலில் உள்ள பனித்த சடை என்பதன் பொருள் குளிர்ந்த சடை என்பதாகும்.

வெப்பம் தரும் குப்பைமேனிக்கு, வெப்பம் தொடர்பான 'திரிபுரம் எரித்தான்' என்னும் சிவன் பெயர் இடப்பட்டது. குளிர்ச்சிதரும் அருநெல்லிக்கு, குளிர்ச்சி தொடர்பான சடாதரன் என்னும் சிவன் பெயர் இடப்பட்டுள்ளது. பெயர்க்காரணம்: குளிர்ச்சி என்னும் ஒப்புமை. மற்றும் அருநெல்லிக்காய்கள் சடைபோல் நீள்கொத்தர்க இருக்கும் என்பதும் நினைவுகூரத் தக்கது. இது வடிவு.

சந்திரன் தங்கச்சி: இது செவ்வகத்தி. அகத்திப்=பூ பிறைநிலா வடிவாய் இருக்கும். முக்கண்ணன் என்பது மூன்று கண்களையுடைய தேங்காயைக் குறிக்கும். அதன் இளமை நிலையுடைய இளநீர், தேங்காய்க்கு இளையோன் (தம்பி) என்னும் பொருளில், முக்கண்ணன் இளையோன் எனப்பெயர் பெற்றுள்ளமையை வேறிடத்தில் காணலாம். அதேபோல், முழுநிலவின் இளமை நிலையுடைய பிறையை முழுநிலவின் தங்கச்சி எனலாம் அன்றோ ? எப்படியோ! அகத்திப்பூ பிறைச்சந்திரன் வடிவம்போல் இருப்பதால்

சந்திரன் தங்கச்சி எனப்பட்டது. வடிவம் - ஒப்புமை.

சமணம்: புழுக்கொல்லி என்னும் வண்டு கொல்லிச் செடி யிது. சிறு புழுக்களையும் கொல்லலாகாது என்பது சமணக் கொள்கை. அங்ங்னம் இருக்க, புழுக்கொல்லி என்பதற்குச் சமணம் என்னும் பெயர் வைத்திருப்பது எதிர் மாறாக உள்ளது. ஆனால், சமணர்கள் சினம் கொள்ளா

திருப்பின், ஒரு கருத்து கூறலாம். சமணர்கள், புழுவைக்