பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 151

திரி = மூன்று; புசம் = தோள்; திரி புசம் = மூன்று தோள் போன்ற அமைப்புடையது. கத்தரிச் செடியின் இலை ஒவ்வொன்றிலும் இதைக் காணலாம். இலையின் முழு விளிம்பிலும் மூன்று பிரிவுகள் இருக்கும். இதை அலை விளிம்பு எனலாம். ஒவ்வோர் அலைக்கும் நடுவே இடை வெளி இருப்பது போல, மூன்று பிரிவுகட்கும் நடுநடுவே இடைவெளி இருக்கும். இந்த அமைப்பை மூன்று தோள்கள் உடையது என்னும் பொருளில் திரிபுசம் என்று கூறியிருக் கலாம். உடற்கூறு.

திரு வஞ்சகன் : சிவனார் வேம்பு இது. சிவன் பெயர்கள் சில, சிவனார் வேம்புக்கு இடப்பட்டுள்ளமை முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கும் அவ்வாறே கொள்ளல் வேண்டும். சிவனுக்குத் திருவஞ்சகன் என்னும் பெயர் எவ்வாறு பொருந்தும் என்பது சிக்கலான செய்தியே! ஆனால், சிவனிடத்திலும் ஒருவகை வஞ்சகம் உண்டு. என்பதை மறைப்பதற் கில்லை. சிவன் அழித்தல் கடவுள் என்பது ஒரு புறம் இருக்க, அவர் பலரை வஞ்சித்துள்ளார். சிறுத்தொண்டரைப் பிள்ளைக் கறி படைக்கக் கேட்டுள் ளார்; இயற்பகை நாயனாரிடம் மனைவியையே கேட் டுள்ளார். வீட்டில் ஒன்றும் இல்லாத வறிய நிலையிலுள்ள இளையான்குடி மாற நாயனாரிடம், மழை பெய்யும் இரவில் சென்று உணவு கேட்டுத் தொல்லை தந்துள்ளார். கண்ணப்பரைக் கண்ணைத் தோண்டச் செய்துள்ளார். அன்பை ஆய்தல் (சோதித்தல்) என்னும் பெயரில் இவ்வாறு மக்கள் அன்பர்கள் பலரை வஞ்சித்ததல்லாமல், திருமால் மலர் வழிபாட்டுக்காக வைத்திருந்த ஆயிரம் தாமரை மலர்களுள் ஒன்றை மறைத்து விட்டார். உமாதேவிக்குத் தெரியாமல் கங்கா தேவியைச் சடைக்குள் மறைத்து வைத் துள்ளார். இவ்வாறு ஒவ்வொருவரது ஒவ்வொரு வகை யான நலத்தை (திருவை) மறைத்து வஞ்சித்துள்ளதால்,