பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 163

முற்காலத்தில் ஒலைச்சுவடியில் எழுதப் பயன்படுத்தப்பட்ட இருப்புக்கம்பி எழுதுகோல் ஆகும். வடிவம். (சா.)

எலி முள்ளு=இராவணன் மீசைப்புல் இது. எலியின் மேலுள்ள மயிர்ப் பகுதியின் இடையிடையே முரட்டுமயிர் இருக்கும். பெருச்சாளியின் முரட்டு மயிர் மிகவும் கூர்மை யாக இருக்கும். கடற்கரையி லுள்ள ஒருவகைப் புல்லின் தொகுதி, இராவணனுக்கு மீசை இருந்தால் எப்படி இருக்குமோ-அதுபோல் தோற்றமளிக்கும். எனவே, இது, இராவணன் மீசைப்புல் எனப் பெயர் பெற்றதன்றி, எலியின் முள்போன்ற மயிர்ப் பகுதியை ஒத்திருப்பதால் எலிமுள்ளு (சா. சி. பி.) எனவும் கூறப்படுகிறது. இதற்கு எலிக்குச்சிப் புல் (த. பே. அ.) என்னும் பெயரும் உண்டு. முரட்டுமயிர் குச்சிபோல் இருப்பதால் எலிக்குச்சி எனப்பட்டது. வடிவம்.

குந்தாணி= மலர்ந்த பெரும்பூக்களைக் குறிக்கும் இது. உரல்மேல் உள்ள குந்தாணிபோல், மலர்ந்த பெரிய மலர் களின் தோற்றம் இருப்பதால் இப்பெயர். வடிவம். (சா. சி. பி.)

மூக்குத்திக் காய்ச்செடி. இது மருதளங்காய்ச் செடி. இதன் காய் முக்குத்திபோல் இருப்பதால் இப்பெயர்த்து. வடிவம்,

மூக்குத்திப் பூண்டு இது கூத்தக் குதம்பைச் செடி. இதுவும் மூக்குத்தி ஒப்புமை உடையதாதலின் இப்பெயர்த்து. வடிவம். இவை இரண்டும் சி. வை. அகராதியில் உள்ளவை.

ஒப்புமைப் பெயர்களும் பொருள்களும்:

மேலே, ஒப்புமையால் பெறப்பட்ட பெயர்கள் சில, சிறுசிறு விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன. இனி, பெயர்க் காரண விளக்கம் சிறிதும் இன்றி, ஆடு-மாடு-மான்