பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

İð மர இனப் பெயர்கள்

'மிலைச்சரே அநாரியர்க்காம் மிலேச்சரும்

. விதித்த பேரே" - (2-31)

அநாரியர் என்றால், ஆரியர் அல்லாதவர்.

ஒரு தோற்றம் எட்டாம் நூற்றாண்டினது எனப்படும் திவாகர நிகண்டிற்கும், தோற்றம். பதினாறாம் நூற்றாண் டினதாகக் கருதப்படும் சூடாமணி நிகண்டிற்கும் இடையே யுள்ள இம் மாறுபட்ட கருத்தால் அறியப்பட வேண்டிய தாவது:- தொடக்கத்தில் நாகரிகம் அற்றிருந்த ஆரியர், நாளடைவில் நாகரிகம் உற்றவராயினர் என்பதாயிருக் கலாம்.

வட இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் உண்ணப் படுவது கோதுமை. அதை உண்பவர்கள் ஆரியர் எனப் படுவர் போலும். இவர்கள் பேசும் மொழிகள், ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்தன என்னும் செய்தியும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாற்று. இந்த ஆரியரை, திவாகர நிகண்டின் மிலேச்சராகக் கொள்வதா அல்லது சூடாமணி நிகண்டின் மிலேச்சராகக் கொள்வதா என்பது, ஆராய்ச்சியாளர்கள் முடிவுகட்ட வேண்டிய ஒன்றாகும். மிலேச்சர் தொடர்பான பெயர்கள் சார்பினால் வந்தவை.

3. கங்கையாறு பாயும் வட இந்தியாவில் விளைவதால் இதற்குக் கங்கை நிருபம் (சா.சி.பி.) என்னும் பெயர் தரப் ப்ட்டுள்ளது. நிருபம் என்பதற்கு, இங்கே, தலைமை - தலையாயது எனப் பொருள் கொளல் வேண்டும்.கோதுமை தலையாய தானியமாகும். இடத்தால் பெற்ற பெயர் இது. சார்பு என்றும் கூறலாம். -

4. குதிரைகளும் விரும்பி யுண்பதால், இதற்குத் 'துரங்கப் பிரியம்' என்னும் பெயரும் உண்டு. துரங்கம் = குதிரை. இஃதும் சார்பினால் வந்த பெயரே.