பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மர் இனப் பெயர்கள்

அத்தன் பாதம்

இறைவன் திருவடிபோல் உள்ளதால், அத்தன் பாதம், அத்தன் புள்ளடி என்னும் பெயர்கள் செருப் படைக்கு ஏற்பட்டன: வடிவம்.மற்றும், செருப்பு அடியில் போடுவ தல்லவா?

அமங்கலம்

திருமணத்திற்குப் பொருள்கள் வாங்கப் பட்டியல் போடுபவர்கள் முதலில் மஞ்சள், பூ - என்று தொடங்கு வார்கள்; எண்ணெயை யாரும் தொடங்கமாட்டார்கள். எண்ணெய் அமங்கலப் பொருளாம். ஆதலின் விளக் கெண்ணெயைக் குறிக்கும் ஆமணக்கு, சார்பினால் அமங்கலம் என்னும் பெயர் பெற்றுள்ளது. வீட்டிலிருந்து யாராவது வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றபின், அன்றைக்கு, வீட்டில் உள்ள வேறு யாரும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கமாட்டார்கள். அவ்வாறு குளித்தால், வெளியில் சென்றவர் செத்துவிட்டதாகவும் அதற்காக எண்ணெய் தேய்த்து அவரைத் தலைமுழுகுவதாகவும் பொருள்படும் என்றெண்ணி அவ்வாறு செய்யார்.

அமல இனங்கள்

அமலம் என்பது புளிப்பைக் குறிக்கும். புளிப்புச்சுவை உடைமையால், புளியாரைக் கீரை அமல நாயகம் எனவும், புளியமரம் அமல பலம்’ எனவும், நாரத்தை முதலியன 'அமல வர்க்கம் எனவும் பெயர் பெற்றன. பெயர்க் காரணம் - பண்பு.

அமிர்த பலம்

அமிர்தம் என்னும் வடமொழிச் சொல்லின் பொருள் சாவா மருந்து. அமிர்தம் உண்டவர் சாகமாட்டார்களாம்.