பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 27

' அன்னதொரு காலை அறுமா முகக்கடவுள்

முன்னொரு சார்வந்து முதுகளிற்றின் கோடொற்றப் பின்னொரு சார்வந்து பிடியின் மருப்பூன்ற இந்நடுவே நின்றான் எறுழ்வயிரத் துனேபோல்' - (பிடியின் மருப்பு = பிடிபோன்ற வள்ளியின் முலைகளாகிய தந்தங்கள்; முதுகளிற்றின் கோடு: பிள்ளையாராகிய யானையின் தந்தம்) என்பது பாடல். எந்த இலையிலும் இல்லாத முள், தூதுவளை இலையில் இருக்கக் காணலாம். தந்தம்போல் கூரிய முலைக்கண் போல், கூரிய முள்ளை யுடைய இலையைக் கொண்டிருப்பதால், தூதுவளை 'இலை முலை மாது' எனப்பட்டது என்று கூறலாமோ? வடிவம்.

எண்ணெய் போக்கி

தலைமுழுகத் தேய்த்துக்கொள்ளும் எண்ணெயைப் போக்குவதால், சிகைக்காய் (சீயக்காய்) எண்ணெய் போக்கி எனப்பட்டது. பயன். இதற்கு வேறு பெயர்க் காரணம் கூறுபவரும் உளர்.

எமகாசம்

ஒமம் உடலுக்குப் பல நன்மைகள் செய்து உயிரைக்

காப்பாற்றுவதன் வாயிலாக, எமனைத் துரத்தியடிக்கிறது; அதனால் எமநாசம்’ எனப்பட்டது. பயன்.

எல்லி நாயகி

எல்லி என்பதற்கு இரவு என்றும், எல்லி நாதன் என்பதற்குத் திங்கள் (சந்திரன்) என்றும் பொருள் உண்டு. சூரியனை நோக்கும் சூரிய காந்தியைப் போல், சந்திரனை நோக்கும் சந்திர காந்தி மலர் "எல்லி நாயகி எனப் பட்டது. சார்பு.