பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 69

ைங்கதை: பசிய தடி (கதாயுதம்). பச்சை மூங்கில் இப்பெயர் பெற்றது. வடிவம்.

பொன்னம்பலம் : சிவன் சிதம்பரத்தில் (தில்லையில்) உள்ள பொன்னம்பலத்தில் நடனமாடுவதால், தில்லைமரம் பொன்னம்பலம் எனப்பட்டது. சார்பு.

மகா அமிழ்தம்: சுக்கின் சிறப்பையும் இன்றியமையாமை யையும் 'கர பத்திரம்' என்னும் தலைப்பில் கண்டோம். பெரிய அமிழ்தமாகப் பயன்படும் சுக்குக்கு இப்பெயரும் அளிக்கப்பட்டுள்ளது. பயன்.

மகா அவுடத நாசனி: அவுடதம் = மருந்து; மகா அவுடதம்= மிக உயர்ந்த மருந்து. பூசனிக்காய் உண்டால் இதற்கு முன் உண்ட உயர்ந்த சில மருந்துகளின் பயனை, முறித்து (நாசஞ் செய்து) விடுமாம். அதனால் பூசணி இப் பெயர்த்து. பயன்.

மகோந்நதம்: இது பனைமரம், மகா உந்நதம் = மிக்க உயர்வுடையது. பனைமரம் மக்கள் முயற்சி மிகுதி யாகத் தேவைப்படாமல் எளிதில் தானே வளரக்கூடியது. இம்மரத்தின் எல்லாவகை உறுப்புகளும் பலவகையில் பயன் படுவதாலும் உயரத்தாலும் இது மகோந்நதம் எனப் பட்டது. பயன். வடிவம்.

மதப்புட்பி க அத்தி என்பதற்கு யானை என்னும் பொருள் உண்டு. யானைக்கு மதம் உண்டு. எனவே, அத்தி மரம் சொல்விளையாட்டாக மதப் புட்பி எனப் பட்டது. அத்திக்கும் பூ, உண்டு. அத்திப்பூக்களின் மூடிய தொகுப்பே அத்திக்காய் என்பது.

மகா பித்தம் : வில்வம் மிக்க பித்தம் தரும். பயன்.

மங்கலாகரம்: மங்கல-ஆகரம்= மங்கலாகரம். ஆகரம் = உறைவிடம். மங்கலம் பொருந்தியது. மங்கலாகரம்,