பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மர இனப் பெயர்கள்

நீண்ட புடல் காண்பதற்கு மங்கலமாய்த் தோன்றுவதால் இப்பெயர் பெற்றது. வடிவம்.

மங்கலி: சீதேவி மங்கலம் உடையவள். எனவே, சீதேவி செங்கழுநீர் என்னுங்கொடி - கொடிப்பூ சொல்

விளையாட்டாக மங்கலி எனப்பட்டன.

மச்சங்கொல்லி: புகையிலைக்குப் பைத்தியங்காரி' எனும் பெயர் உள்ளமை முன்னர்க் கூறப்பட்டுள்ளது. மச்சம் என்பது மூளை; இது உடலில் உள்ள ஏழு தாதுக்களுள் ஒன்று. புகையிலை பித்தம் உண்டாக்கி மூளையைக் கெடுக்குமாதலால், மச்சங்கொல்லி எனப்பட்டது. பயன்.

மடவை மயக்கி: பெண்டிரை மயங்கச் செய்யும் ஒரு வகைக் கொடியாம் இது. செயல்.

மடியுண்டடிப்பான். பறங்கிப் பூசணிக்காயின் மேல் பகுதி, மடிப்பு மடிப்பாயிருக்கும். இதனால் மடியுண்டு அடிப்பான் எனும் பெயர் வந்திருக்கலாம். மேலே போட்டால் உடம்பு அடியுண்டதுபோல் வலிக்குமாதலின் அடிப்பான் என்றனர் போலும்! வடிவம்.

மணக் கோலம் : திருமண அரங்கில் வாழைமரம் கட்டி யிருக்குமாதலால், வாழை இப்பெயர் பெற்றது. சார்பு.

மணிவித்தையுள்ளோன். தூதுவளையின் காய் - பழம் மணிபோல் உருண்டையாக - அழகாக இருக்குமாதலின் தூதுவளை இப்பெயர்த்தாயிற்று. வடிவம். வித்து= விதை யுள்ள கனி.

மதகுஞ்சரம்: மதமுள்ள யானை. அத்தி = யானை; எனவே, இது சொல்விளையாட்டாக அத்திமரத்தைக் குறிக்கிறது.