பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 79

முலைத்தாசி: இலைகளையுடைய கள்ளிச்செடி, முலை யழகுடைய தாசி போன்றிருத்தலின் இப்பெயர்த்து. வடிவு.

முனிதளம் - முனி பத்திரி - முனிப் பூண்டு; தளம் = இலை. பத்திரி = இலைகளை உடையது. முனி = அகத்திய முனி. எனவே, இப்பெயர்கள் சொல் விளையாட்டாக அகத்தி மரத்திற்கு ஆயின.

மூட்டைக்கொல்லி = சிறுதும்பை முட்டைப்பூச்சியைக் கொல்லுமாம். பயன்.

மூதேவி மூலி; பொய்ச்சான்று சொல்பவரின் வீட்டில் மூதேவி யிருப்பாள் என முன்னர்க் கண்டோம். (காண்க குடிகேடன்). மூதேவியிருக்கும் அவ்விடத்தில் சிறுபசளைக் கீரைக் கொடியும் படர்ந்து மண்டிக் கிடக்குமாதலின், மூதேவிமூலி எனச் சிறுபசளை பெயர் சூட்டப்பட்டிருக்க லாம். சார்பு.

மூத்திரதோஷ நாசனி: இது சீரகம். சிறுநீர் (மூத்திரம்) தொடர்பான நீர்ச்சுருக்கு, கல்லடைப்பு முதலிய பிணிகளை நீக்குவது சீரகம். பாடல்:

தேரையர் குண பாடம்: ' வாந்தி யருசி.குன்மம் வாய்நோய் பீலிகம்இரைப்

பேந்திரு மல் கல்லடைப்பி லாஞ்சனமுட் -

சேர்ந்தகம் மல் ஆசன குடாரி யெனும் அந்தக் கிரகணியும் போசன குடாரி யுண்ணப் போம்.”

சீரகத்திற்குப் போசன குடாரி என்னும் பெயருமுண்டு. சீரகம் சிறுநீர்ப் பெருக்கி (Diuretic) என்று பொ. ப. நூல் கூறுகிறது. பயன்.