பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மர இனப் பெயர்கள்

எரியுருகு அகிலோடு ஆரமுங் கமழும் செருவேல் தானைச் செல்வ” - (18:51-54)

பரிமேலழகர் உரை 'செருவேல் தானைச் செல்வ! நின் பூசைக்கண் புரிதலுற்ற நரம்பினது ஒலியும் புலவர் பாடிய இயற் பாட்டுக்களும் பொருந்தி வேதவொலியும் உபசார மாகிய பூவும் தீபமுங் கூடி எரியின்கண் உருகும் அகிலும் சந்தனமும் தூபமாய்க் கமழாநிற்கும் .”

மேற்காட்டியுள்ள மூன்று பரிபாடல் நூற்பாடல் பகுதி களால் முருகனுக்கும் அகிலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தெரியவரும். எனவே, சார்பு காரணமாக, அகிலுக்கு 'முருகா’ எனும் பெயர் தரப்பட்டது.

எலுமிச்சம் பழத்திற்கும் முருகா என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. முருகனது வேல் நுனியில் எலுமிச் சம்பழம் செருகப்பட்டிருக்கும். காவடியிலும் இடம்பெற் றிருக்கும். முருக பூசனையிலும் முருகன் தொடர்பான வெறியாட்டுப் பூசனையிலும் இதற்கு இடம் உண்டு.

எனவே, எலுமிச்சையும் முருகா எனப்பட்டது. சார்பு.

முக்கிற்கரியார்: சிவப்பாயுள்ள குன்றிமணியின் (குண்டு மணியின்) மூக்கு கரிய நிறமாயிருக்கும். இ. சா.

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

மூக்கிற் கரியா ருடைத்து - (குறள் - 277)

குறளிலுள்ள மூக்கிற் கரியார்’ என்னும் பெயர் அப்படியே குன்றிமணிக்குத் தரப்பட்டுள்ளது. ஒப்புமை.

முப்புரமாலி அரக்கரின் முப்புரங்களை எரித்த சிவன்

முப்புரமாலி எனப்படுவார். அவரது பெயர் சொல் விளையாட்டாகச் சிவனார் வேம்புக்கு வைக்கப்பட்டது.