பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மர இனப் பெயர்கள்

வாந்தி சோதினி கருஞ்சீரகம் வாந்தியைக் குணப் படுத்துமாதலின் இப்பெயர்த்து. பயன்.

வாரிகேசம்: வாரி = வருவாய், செல்வம். இ.சா.

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்' - (குறள் - 14)

வெட்டி என்பதற்கும் செல்வம் என்னும் பொருள் உள்ளமை முன்னரே கூறப்பட்டுள்ளது. கேசம் என்பதற்கு வேர் என்னும் பொருள் உண்டு. எனவே, வெட்டிவேர் வாரி கேசம் எனப்பட்டது. சொல்விளையாட்டு. கேசம் என்ப தற்குத் தலைமயிர் என்ற பொருளும் உண்டு. தலைமயிரில் வாரி முடிப்பதால் வெட்டிவேர் வாரிகேசம் எனப்பட்டது

என்றும் கூறலாம்.

வா(ய்) ருசி: மொச்சை வாய்க்கு ருசி-சுவை தருதலின் இப்பெயர்த்து. பயன்.

வாலைப் பெண்: இளம் பெண் வாலைப் பெண். செவ்வாமணக்கு வாலைப் பெண் போல் அழகாயிருப்பதால் வாலைப் பெண்ணாயிற்று. ஒப்புமை.

விசித்திரம்: காட்டாமணக்கு விசித்திரமான (அழகியமேலான) தோற்றம் உடைத்து; ஆதலின் பண்பாகுபெய ராய் விசித்திரம் எனும் பெயர் வந்தது. வடிவம்.

விசுவநாதன். சிவன் விசுவநாதன்; எனவே, சொல் விளையாட்டாய், சிவகரந்தை விசுவநாதன் எனப்பட்டது.

விசுவாசன்: இது அதிவிடயச் செடி. விடயம் என்ப தற்கு, பயன் (இலக்கியச் சொல்லகராதி), காம இன்பம் (பிங்கலம்) என்னும் பொருள்கள் உண்மையின், மிகவும் விசுவாசிக்கத் தக்கது என்னும் பொருளில், சொல் விளை

யாட்டாக இப்பெயர் பெற்றது.