பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 87

விவுக்கடிப் பிரியன் ; கசப்புப் பசளை நச்சுக்கடி போக் கும். பயன்.

விஷத்துக்கு அரசன், ஆடுதின்னாப்பாளை நஞ்சு போக்குவதில் சிறந்தது பயன்.

விடம் போக்கி: கருங்குருவை நெல்லரிசி உண்டால், உடம்பிலுள்ள நச்சுக் கூறுகள் தொலையுமாதலின், கருங் குருவைநெல் விடம் போக்கியாயிற்று. பயன்.

விஷ்ணுபத்திரம்-விண்டுபத்திரம்: விஷ்ணு, விண்டு = திரு மால். துளசி திருமாலுக்கு உரிய பத்திரம் ஆதலின் இப் பெயர்கள் பெற்றது. சார்பு.

விந்தை: விந்தம் என்னும் மலையை அடக்கிய அகத் தியர் விந்தை எனப்பட்டார். எனவே, சொல் விளை யாட்டாக அகத்திமரம் விந்தை எனப்பட்டது.

விரணங்கள் குட்டம் போக்கி: புன்னை, புண்களையும் குட்ட நோயையும் போக்குமாம். பயன். புன்னை ஒரு மரம்.

அகத்தியர் குணபாடம் : 'கரப்பான் சொறி சிரங்கு காணா தகற்றும்’ 'கன்ன விரணம் கடுஞ்சந்நி பாதமுடன்

இன்னலுறு வாதையிவை யகலும்’

'பொல்லா வலியினமும் புண்கிருமியுந் தொலையும்’ விரணத்தின் நீரைக் கொல்லி. இது ஆரைக்கீரை, புண்ணில் நீர் வடியாமல் குணமாக்குமாம், பயன்.

அ.கு.பா. பாடல்:

" தின்றால் உரிசை தரும்; தீராப் பயித்தியத்தைப்

பொன்றாத நீரிழிவை, புண் நீரை-யென்றுமிந்த