பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்த வைத்திய அகராதியில் உள்ளவை

அணியுரி மரம்: உடம்பில் அணிகின்ற - கட்டிக்கொள் கின்ற உரியை பட்டையை அளிக்கும் மரவுரி மரம் அணியுரி மரம் எனப்பட்டது. இது பயன் காரணமாக வந்த பெயர். .

அதிதாகம் நீக்கி: மிகுந்த தாக வேட்கையை அதிமதுரம் நீக்குவதால், அதற்கு 'அதிதாகம் போக்கி’ என்னும் பெயர் நல்கப்பட்டது. பாடல் சான்றுகள்:

தேரையர் குணபாடம்: ' கத்தியரி முப்பிணியால் வருபுண், தாகம்,...

குயப்புணும் போம் மதுரகம் எனக் கூறுங்காலே’(மதுரகம் = அதிமதுரம்)

ஓர்ஓலைஏடு:

தித்திக்கும் அதிமதுரக் குணத்தை எடுத்துரைக்கில்

சிரமயக்கம், சுரம், தாகம், ... ..... அறுத்திடும் வச்சிரம் என்பார் அதிமதுரந் தனையே’

மற்றோர் ஏடு: ' அதிமதுரம் பேரிந்துக் கான குணம் கேளிர்

கொதிமருவாப் பித்தங் குறுகுமே-துதி மருவாய் நீரதுவும் உண்டாம் நிலையாத தாபம்போம் பாரறியச் சொன்னோம் பார்த்து'-(தாபம் = தாகம்)

எருதுகன்னி மரம்: எருது = காளை மாடு. அதன் கன்னியாகிய பெண்பால் பசு ஆகும். எனவே, பசு முன்னை