உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

மருமக்கள்வவழி மான்மியம்

நீட்டின கையை மடக்கப்பீஸு
பாரப் பீஸு[1] கீரப் பீஸு
பார இழவு பயிற்றுப் பீஸு
கண்டு பீஸு காணாப் பீஸு 305
முண்டுத் துணிக்கொரு முழுமல் பீஸு
அந்தப் பீஸு இந்தப் பீஸு
ஆனைப் பீஸு பூனைப் பீஸு
ஏறப் பீஸு இறங்கப் பீஸு
இப்படி யாக என்றென் றைக்கும் 310
பீஸு பீஸாகப்[2] பிச்சுப் பிடுங்கும்
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்,
குதித்துக் குடியை முடித்திடவேண்டாம்;
மூவுல கேத்து மூவரும்[3] நாணப்
பொதுரிக் கார்ட்டுப் புரையில்[4] தனியாய் 315
ஓர், மூலையில் இருந்து முத்தொழில்[5] இயற்றும்
தெய்வத்தின் இரு சேவடி நிதமும்
கண்டு தொழுது காணிக்கை யிட்டு
வணங்காதவர்க்கு வருந்தோ ஷங்கள்
இத்தனை யென்றிட யாரால் முடியும்? 320


  1. 303. கோர்ட்டு பாரங்களைப் பூர்த்தி செய்து எழுதுவதற்குரிய கூலி
  2. 311. பீஸு பீஸாய் : பீஸ் (fees) என்னும் கட்டணம் கட்டணமாக என்றும், துண்டு (piece) துண்டாக என்றும் பொருள்படும். பிச்சு - பிய்த்து.
  3. 314. மூவர் - பிரம, விஷ்ணு, ருத்திரர்.
  4. 315. பொது ரிக்கார்ட்டுப் புரை : ரிக்கார்டுகள் வைக்கப்பட்டிருக்கும் இடம்; ஆவணக் களரி (Record Office).
  5. 316-7. முத்தொழில்: இல்லாததை உண்டு பண்ணுதல்,
    உண்டுபண்ணியதைப் பரிபாலித்தல், உள்ளதை அழித்தல்
    என்பன, தெய்வம் - இங்கே குமஸ்தா.