உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோடேறிக் குடிமுடித்த படமம்

109

அரை நிமிஷத்தில் அநியா யங்கள்[1]
ஐம்பதைக் கோர்ட்டில் ஆக்கத் தெரியும்;
பட்டிகை எழுதப் பாரம் போடக்
கெட்டி கெட்டி என்றுபேர் கேட்ட
ஏட்டுக் குமஸ்தன்[2] யானே யாவேன் 450
சாடை காட்டிச் சாட்சிக ளுக்குத்
தெரியாக் காரியம் தெரியச் செய்ய
என்னைப் போல் இங்கு யாருண்டு? ஐயா!
கட்சிகள் வந்து என் கையில் தந்த
பணத்தைச் சொந்தப் பணம்போல் எண்ணி 455
வாங்கிப் பெட்டியில் வைத்துக் கொள்வேன்;
சிறிது மோசஞ்[3] செய்திட மாட்டேன்;
வக்கீல் குமஸ்தன் சத்திய வாசகன்[4]
இன்னார் என்று இந் நாடெலாம் அறியும்.
ராஜியும் வேண்டாம், கீஜியும் வேண்டாம், 460
நானே கேஸு நடத்தி, ஜயமும்
வாங்கித் தருகிறேன்; மலைக்க வேண்டாம்;
என்,
வக்கீல் பேர்க்கு ஒரு வக்கா லத்தை


  1. 446. அநியாயம்: பிராது என்றும், நியாயக்கேடு என்றும் இருபொருள்.
  2. 450. ஏட்டுக்குமஸ்தன் - தலைமைக் குமஸ்தா (Head clerk)
  3. 457. சிறிது மோசம்: சிறுதுகூட மோசம் செய்ய மாட்டேன் என்றும், சிறிய மோசம் செய்யாமல் பெரிய மோசமே செய்வேன் என்றும் இருபொருள்.
  4. 458. சத்திய வாசகன் : சொல் (அதாவது வாசகம்) மட்டுமே சத்தியம், செயல் முற்றிலும் பொய்யும் புரட்டும் என்பது கருத்து.