உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

மருமக்கள்வழி மான்மியம்

வேறு

குலக்குறத்தி வரினுமொரு
       கோடங்கி வரினும்
குறிகேட்டுப் பொருள்விரித்துக்
       கொண்டிருந்தோம். அம்மா![1]
துலக்கமுறப் பரல் பரத்திச்
       சோசியர்கள் கணித்துச்
சொன்னவைகள் உண்றை யென்று
       துணிந்திருந்தோம், அம்மா! 1
பதியிருக்கும் பதியெங்கும்
       பதிவாகச் சென்று
பால்வைத்துக் கணக்குகளும்
       பார்த்து வந்தோம்,[2] அம்மா!
கதிகிடைக்கும் எனக்காளி
       கொடை நடக்கும் காலம்
கடாத்தறித்துப்[3] பொங்கலிட்டுக்
       காத்திருந்தோம், அம்மா! 2
குறத்திசொன்ன குறியெல்லாம்
       குறிதவறிப் போச்சே!
கோடங்கி[4] குறியாலும்
       குணமில்லா தாச்சே!


  1. 1. அம்மா: விளி; இவ்வரலாற்றைச் சொல்லிவரும் பெண் மற்றொரு பெண்ணை அம்மா என விளித்துக் கூறுகிறாள்.
  2. 2, 4. நாராயணசாமி பதிகள் அல்லது கோயில்களை
    நாஞ்சில் நாட்டிலுள்ள பல ஊர்களிலும் காணலாம். அப்
    பதிகளில் சிறப்பு நடத்துவதற்குப் 'பால் வைத்தல்' என்று
    பெயர். பதி கொண்டாடி சன்னதம் கொண்டு அடிமைகளுக்கு வருங்காரியம் கூறுவது 'கணக்குப் பார்த்தல்' எனப்படும்.
  3. 2. கடாத் தறித்து - கடாவைப் பலியிட்டு
  4. கோடங்கி - குடுகுடுப்பைக்காரன்.