கோடேறிக் குடிமுடித்த படலம்
113
நிறுத்துரைக்கும் நிமித்திகரின்
நிமித்தங்கள் இந்நாள்
நினைக்கும்போ துளம் வெந்து
நீறாகு தம்மா!
3
பதித்தலத்துப் பால்வைத்தும்
பயனடைந்தோ மில்லை!
பலிகொடுத்தும் தேவி அருள்
பாலித்தா ளில்லை!
விதித்தவீதி தான் இருக்க
வேறுவிதி வருமோ!
விம்மியினி அழுவதெலாம்
வீணலவோ அம்மா!
4
வேறு
இப்பெரும் கஷ்டம் யாரே படுவர்?
கணவர்,
அல்லும் பகலும் அலைந்து சடைத்தார்,
எலும்பும் தோலு மாக இளைத்தார்.
இருமல் இழுப்புக்கு இருப்பிட மானார்,
5
எதிலும் விருப்பம் இல்லா தானார்.
வெளியூர்ப் போக்கை விட்டே விட்டார்,
உள்ளூர் மட்டும் உலாவி வந்தார்;
சிலநாள் பின்னும் செல்லச் செல்ல
தெருவில் மாத்திரம் திரிவா ராயினர்;
10
படிப்படி யாய்இப் படியவர் பாடு
குறைந்து குறைந்து கொண்டே வந்தது;
அண்டை வீடாகி, அறைப்புரை யாகி.
படிப்புரை யாகிப் பாயிலும் ஆனார்;
எழுந்து நடக்க இயலா தானார்;
15
நடந்தவர் கீழே கிடந்தா ரம்மா!
ம. ம.—8