உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கும்பியெரிச்சல் படலம்

125

வெவ்வழி, சற்றும் வெளிச்ச மிலாவழி
இருள்வழி செல்பவர் இடறும் கல்வழி
கூகையும் ஆந்தையும் குடிகொளும் குகைவழி
நெருஞ்சில் படர்ந்து நிரம்பிய முள்வழி;
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வ' மென்று
ஔவை சொல்மொழி அறியா மடவழி;
பெற்ற பிதாத் தன் பிள்ளை கட்குப்
பழியும் பாவமும் பற்றிய நோயும் 40
அழியாப் பொருள்களாய் அளிப்ப தன்றி,
ஒருகா சேனும் உதவாச் சதிவழி!
இது,
மக்கள் வழியென மதிக்கவொண் ணாது!
மருமக் கள்வழி யாகவு மாட்டாது; 45
இருவழி கட்கும் இடைவழி யாய்வரும்
வழியிது போல்இவ் வையகத்து எங்கும்
உண்டோ? அம்மா! உண்டோ? அம்மா!
வீடு விற்று விளைநிலம் விற்று 50
ஆடு மாடுகள் அனைத்தும் விற்று
குடிக்கும் செம்பு குழியலும்[1] விற்று,
பாத்திரம் பண்டம் பலவும் விற்று,
தண்டை பாத சரங்களும் விற்று,
காப்புக் காறை கடுக்கனும் விற்று,
பதக்கம் சிற்றுருப் பாம்படம்[2] விற்று, 55
தாலியை விற்றுப் பீலியை[3] விற்று,


  1. 51. குழியல் - சாப்பிட உபயோகிக்கும் பாத்திரம்.
  2. 55, சிற்றுரு - கழுத்திலணியும் ஓர் ஆபரணம்; பாம்பாம்படம் - காதிலணியும் ஓர் ஆபரணம்.
  3. 56. பீலி - கால் விரல்களிலணியும் வெள்ளி அணி.