உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

மருமக்கள்வழி மான்மியம்

வக்கீல் சாமி மலரடி களிலும்
குமஸ்தா மாடன் கோவில் களிலும்
சாக்ஷித் தெய்வச் சன்னிதி களிலும்
பழந்தேங் காய்கள் படைப்புகள் வைத்தும், 60
வேண்டிய புகையிலை வெற்றிலை வைத்தும்,
விதம்விதம் வேட்டிகள் முண்டுகள் வைத்தும்,
சேலை தாவணி சீட்டிகள் வைத்தும்,
இன்னும் பலவாறு இவர்க ளிடத்து
முன்னம் கொண்ட கடன்களை முற்றும் 65
குறைகூறாது கொடுத்தும் முடிவில்
வழக்கை இழந்து வாய்மண் ணாகி.
உண்ண உணவும் உடுக்கத் துணியும்
இல்லா தாகி,யாரும் கைவிட,
முற்றத் துறந்த முனிபுங் கவர் போல் 70
பக்கப் பழுத்த[1] பட்டினத் தடிகள்போல்
"உற்றார் சதமல், ஊரார் சதமல்,
பெண்டிர் சதலை, பிள்ளையும் சதமல.
இப்பே ருலகில் யாரும் சதமல"[2]
என்று கூறி இனித் தோவாளைக்[3] 75


  1. 71. பக்கப் பழுத்த - மிக்க வயதாகி உடல் பழுத்த.
  2. 72-4. பட்டினத்தடிகள் பாடல், திருவேகம்பமாலை;

    ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
    பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்
    சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
    யாருஞ் சதமல்ல நின்தாள் சதம் கச்சிஏகம்பனே.
  3. 75-76. தேவாளைக் கஞ்சிப்புரை: தேவாளை என்பது நாஞ்சில் நாட்டிலுள்ள ஓரூர் திருவிதாங்கூர் மன்னரால் இங்கே ஏழைகளுக்குக் கஞ்சிவரர்க்கும் தருமம் முன்பு நடைபெற்றுவந்தது.