உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

29

இவர்கள் இலக்கண வித்துவான்கள்; தாடிபற்றி யெரியும்போது சுருட்டுப் பற்றவைக்க நெருப்புக் கேட்கிற இனத்தைச் சார்ந்தவர்கள். இவர்களைத் தனது சோகங்கலந்த சிரிப்பினால் ஒதுக்கிவிட்டுத் தனது கதையைத் தொடங்குகிறாள். துன்பத்திற்கும் வறுமைக்கும் தாயகமாயுள்ள ஒரு குடும்பத்தில் தோன்றினாள்; அநாதை. பஞ்சகலியாணிப் பிள்ளைக்கு ஐந்தாவது மனைவியாய் இவள் வாழ்க்கைப்பட்டாள்; புகுந்தகத்தில் செல்வமிருந்தது; ஆனால் துன்பத்துக்கும் குறைவில்லை. அங்கே அவளுக்குக் கிடைத்தது புழுக்கை யுத்தியோகந்தான்; சக்களத்திகளின் தலையணை மந்திரோபதேசமெல்லாம் இவள் தலையில்தான் விடிந்தது. மாமியின் கொடுங்கோலரசு; இவ்வரசி தாடகைப் பிராட்டியாரின் அவதாரம்; இவள் திருவிளையாடலெல்லாம் பத்துப் பரஞ்சோதிகள் பாடினாலும் முடிவடையாது.

இந்த ஆட்சியில் புது மருமகள்

கஞ்சியோ கூழோ காடி நீரோ
கும்பி யாரக் குடித்ததே யில்லை.

ஒருநாள் தன் மகன் கேலியாகப் பேசத் தொடங்கியது அவனுக்கே கெடுவினையாக முடிந்தது. இதனால் விளைந்த துன்பம்; இதுபோன்ற துன்பங்களிடையில் நகைப்பு - நிகழ்ச்சிகள்; தனது கணவன் மனைவியர் ஐவரோடும் குமரித் தீர்த்தம் ஆடியது (இது தேவர்களுக்கும் ஆனந்தமளிக்கும் திருக்காட்சி); கணவன் தீர்த்த மாடியதன் பயனாக மீளாவுலகம் புகுந்து மீண்டு வந்தது; தான் அடைந்த தாங்கவொண்ணாத் துன்பம்; பின்னர், கணவனது