உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மருமக்கள்வழி மான்மியம்

துன்பத்தை அளவிட முடியுமா? அத்துன்பத்தின்‌ காரணத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று அவரது உள்ளங்‌ கொதித்தெழுமா? இரண்டும்‌ முடியாத காரியம்‌. அக்குடும்பத்திற்‌ பிறந்த ஒருத்திக்‌குத்தான்‌ இரண்டும்‌ இயலும்‌; வாய்பேசாது மௌனமாயிருந்து துக்கங்களையெல்லாம்‌ அடக்கியடக்கி வைப்பாள்‌; முடிவில்‌ அத்‌ துக்கங்கள்‌ நெடுங்காலமாக அடக்கபட்டிருந்த காரணத்தினாலே, குமுறிக்‌ கொந்தளித்து அதிவேகத்துடன்‌ வெளிப்‌ புறப்படும்‌. அந்நிலையில்‌ வருஞ்‌ சொற்கள்‌ உண்மையொடு பட்டனவாகும்‌;. கேட்டோர்‌ இதயத்தைத்‌ தகர்க்கத்‌ தக்கனவாகும்‌. இக்காரணங்களினால்‌ நாஞ்சினட்டுக்‌ குடும்பத்திலுள்ள பெண்ணொருத்தியின்‌ வாய்ப்‌ பிறப்பாகவே கதையைப்‌ பிள்ளையவர்கள்‌ அமைத்துள்ளார்கள்‌. தன்‌ சுய சரிதையையே அவளும்‌ கூறுகின்றாள்‌. இச்‌ சுயசரிதையின்‌ மூலமாக எத்தனையோ காட்சிகள்‌ சித்திரிக்கப்‌படுகின்றன.

உலகமே துக்கமயமாய்கத் தோன்றுகிறது. எல்லாவகை இடையூறுகளையும்‌ நீக்கவல்ல விநாயகக் கடவுளும்‌ இடையூற்றால்‌ நெஞ்சு கலங்கி வருந்தி நிற்பவர்போலத்‌ தோன்றுகிறார்‌. அவரும்‌ மருமக்கள்‌ வழியைச்‌ சார்ந்தவராயிருக்க வேண்டும்‌; அதனால்‌தான்‌ துன்புறுகிறா ரெனச்‌ சுயசரிதை கூறும்‌ கதாநாயகி நினைக்கிறாள்‌. இக்கடவுளின்‌ அருகே நிற்கும்‌ ஒரு சிலரிடத்தும்‌ துக்கம்‌ தோன்றுகிறது; ஆனால்‌ மனத்தில்‌ இரக்கமில்லை; ஏழைப்‌ பெண்‌ புலம்புவதில்‌ ஒரு மாத்திரை அதிகமென்று துக்கிக்கிறார்கள்‌.