உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதைச் சுருக்கம்

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி வேளாளர் குலத்தில் பிறந்த ஒரு பெண் தன் ஜீவிதகாலத்தில் அனுபவித்த கஷ்டங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி வருந்துகிறாள். இவள் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். பதினாறாவது வயதில் ஒரு பிரபுவுக்கு ஐந்தாம் மனைவியானாள். கணவன் வீட்டில், மாமி, சக்களத்திகள், மதினி முதலியோரால் இவள் அடைந்த துன்பத்திற்கு அளவில்லை. சிறிது நாளில், இவள் கணவனுக்கும் அவன் மருமகனுக்கும் குடும்பக் காரியங்களை முன்னிட்டு மனஸ்தாபம் உண்டாயிற்று. மனஸ்தாபம் முற்றி வழக்காய் முடிந்தது. வழக்கு முடியுமுன் கணவன் வியாதியில் வீழ்ந்தான், அச்சமயம் அவனுடைய [1]அவகாசிகள் செய்த துன்பங்களைச் சொல்லி முடியாது. மரணத்தறுவாயில் கணவன், தன் மக்களைக் காப்பாற்றும்படி. மருமகனிடம் ஒப்புவித்தான் ஆனால், அவன் இறந்தவுடன் மனைவி மக்கள்

யாவரும் வீட்டிலிருந்து வெளிப்படுத்தப்பட்டனர். அப்பொழுது, தங்களுக்குள் வழங்கும் மருமக்கள் வழி அவகாசக் கிரமத்தை அப்பெண் பழித்துரைக்கிறாள்.


  1. அவகாசிகள் - வாரிசுகள்,