உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருமக்கள்வழி மான்மியம்

விநாயகர் வணக்கம்

எம்பெரு மானே! இணையடி பரவும்
அன்பினர் வேண்டிடும் அவையெலாம் அளிக்க
யானை நீள்கரம் ஏந்திய கடவுளே!
உலகெலாம் போற்றும் ஒருவனே! உனது
தந்தையோ. 5
என்றும் சையில் தலையோ டேந்தி
இரந்து திரிவான், இருப்பிட மில்லான்.
அம்பலந் தோறும் ஆடி அலைவான்,
அமிழ்தென நஞ்சையும் அள்ளி யுண்பான்,
பித்தனாகிப் பேயொடு குனிப்பான், 10
நாடிய பொருளெலாம் நாசஞ் செய்வான்.
மாமனோ,


2-3. இவ்வடிகளுக்கு இருவகையாகப் பொருள் கூறலாம். 'அன்பினர்' உனக்கு வேண்டிக்கொள்பலற்றை யெல்லாம் வாரியுண்பதற்கு (அளிக்க) வசதியாக யானை நீள்கரம் ஏந்தினாய் என்பதொன்று. 'அன்பினர் உன்னிடம் வேண்டுபவற்றையெல்லாம் அவர்களுக்கு அளிக்க யானை நீள் கரம் ஏந்தினாய்' என்பது மற்றொன்று.
20. குனிப்பரன்-நடமாடுவாள்.