உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

மருமக்கள்வழி மான்மியம்

அணிமுடி யாக அணிதிரு மூல
மன்னர் புரக்கும் வளமலி வஞ்சி 15
நாட்டிற்[1] சிறந்த நாஞ்சில் நாட்டில்
தொல்லூ ராகும் நல்லூ ரதனில்[2]
மேழிச் செல்வம் விரும்பும்வே ளாளர்
குலத்தில்ஓர் எளிய குடியிற் பிறந்தேன்.
தந்தைநோ யாளி, தாயுமோ ரேழை. 20
அண்ணன் தம்பிகள் ஐவரும் மாண்டார்.
அக்காள் தங்கையும் இல்லை, அடுத்தவர்
உற்றார் உறவினர் ஒருவரு மேயிலை;
ஒருதடி நிலமும் ஓரணை ஏரும்[3]
ஒருசிறு குடிலும் உண்டெமக் காஸ்தி. 25
ஐயோ தெய்வமே! ஐயோ தெய்வமே!
உற்றதெ லாம்சொல ஒழிகழி நூலாம்[4],
ஒருநாள் போதுமோ? இருநாள் போதுமோ?
முற்றும் கேளும், முடிவையும் பாரும்!


  1. 14-15. திருமூலமன்னர் - திருவிதாங்கூர் நாட்டை கி.பி. 1886 முதல் 1924 வரை ஆண்ட அரசர். வஞ்சிநாடு-திருவிதாங்கூர் நாடு.
  2. 17. நல்லூர் - சுசீந்திரத்தின் அருகிலுள்ள ஒரு சிற்றூர்.
  3. 24. தடி-வயல். ஓரணை ஏர்-உழவு வேலைக்கான ஒரு
    ஜதை மாடும் அதற்குரிய ஒரு கலப்பை நுகமும். இம்மான்
    மியத்தில் பின்னர் வரும் 'ஈரணை ஏரும் ஏழு பசுவும்' (9:109) என்பதனோடு ஒப்பு நோக்குக. சுல்வெட்டுக்களிலும் 'அணை என்றுதான் வந்திருக்கிறது. உலக வழக்கிலும் ஓரணை ஏர், ஈரணை ஏர் என்றே வழங்கி வருகின்றனர்.
  4. 27. ஒரு கழி நூல்: மிக நீண்டது. நூலைப் பிரிக்கப் பிரிக்க வந்துகொண்டே இருப்பதுபோல, கதையும் சொல்லச்
    சொல்ல வளர்ந்துகொண்டே பேரகும்; சொல்லி முடிவு
    பெறாது.