இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
மருமக்கள்வழி மான்மியம்
நல்லது நல்லது, நல்லது அம்மா!
15
தின்பவ னெல்லாம் தின்பான் போவான்.
திருக்கணங் குடியான் தெண்ட மிறுப்பான்.[1]
அவியல் பொரியல் துவையல் தீயல்
பச்சடி தொவரன் கிச்சடி சட்டினி
சாம்பார் கூட்டுத் தயிர்ப்புளி சேரி[2]
20
சேனை[3] ஏத்தன் சேர்த்தெரி சேரி
பருப்பு பப்படம் பாயசம் பிரதமன்[4]
பழமிவை யோடு படைப்புப் போட[5]
எத்தனை நாளைக் கெங்களால் ஏலும்?
அரசனும் கூட ஆண்டியா வானே!
25
இப்படி உண்மை யிருக்க, 'யாவும்
மக்களுக் காக வாரிக் கொடுத்தான்.
கடன்கள் வாங்கினான், கைச்சீட் டெழுதினான்,[6]
- ↑ 16-17. 'தின்றவன் தின்றான். திருக்கணங் குடியான்
தொண்டமிறுப்பான்' என்பது ஒரு பழமொழி: செலவு செய்பவன் ஒருவன்; ஆனால் சுகமும் அனுபவமும் பெறுபவன்
வேறொருவன் என்பது பொருள். திருக்கணங்குடி- திருக்குறுங்குடி. தெண்டம் இறுப்பான்-வரியைக் கொடுப்பான். - ↑ 18-20. கறிவகைகள்.
- ↑ 21. சேனை - சேனைக்கிழங்கு. ஏத்தன் - ஏத்தங்காய் (ஒரு வகை வாழைக்காய்). எரிசேரி - இவற்றைச் சேர்த்துச் செய்யும் கறிவகை.
- ↑ 22. பப்படம் - அப்பளம். பிரதமன் - பாயசவகை.
- ↑ 23. படைப்புப் போட: சிறு தெய்வங்களுக்குப் படைக்கும் அன்னம், கறியகை முதலியவற்றைப் படைப்புப் போடுதல் என்று சொல்லுவர். விசேஷ பிரார்த்தனை (சிறப்பு) காலங்களில் செய்யும் இவ்வகைப் படைப்பில் எல்லா வகையான கறிவகைகளும், கனிவர்க்கங்களும் பரிமாறியிருப்பர். இங்கும் அதுபோல் அவியல், பொரியல் முதலிய ஏராளமான கறிவகைகள் வைத்துத் தினமும் பெருவிருந்து உண்ணுகிறார்கள் என்பது கருத்து.
- ↑ 28. கைச்சீட்டு: கையால் எழுதிய குறிப்புச் சீட்டு.