இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கேலிப் படலம்
51
ஒற்றிக் கோடுத்தான்'[1] என்றுன் பெற்றோர்
எங்கள் ஐயாவைத்[2] தூற்றுவ தெல்தாம்
30
உணர்வில்லாமல் உளறுவ தல்லவோ?'
என்று கூறிய மொழிகள் யாவையும்
மங்கை கேட்டு, மனம்நொந் தழுது,
ஒன்றைப் பத்தாய்ப் பெருக்கி, உடனே
தாய்க்குச் சொன்னாள்; தந்தையும் அறிந்தார்;
35
பையப் பையப் பாட்டியும் அறிந்தாள்;
யாவரும் கூடி, என்கண் மணியை
'உனக்கிங் கென்ன உண்டடா பயலே?
உடையக் காரியைத் தடைவையோ[3] பயலே?
40
பத்திர மாயிரு! பழைய காட்டுக்கு[4]
அனுப்பி விடுவேன், அறிநீ பயலே!'
என்றிப்படிநா எழுந்தது சொல்லி,
ஏசி வசைகள் பேசிப் பிரம்பால்
ஐயோ! ரத்தம் சிந்த அடித்தனர்.
காணாதென்று கண்ணில் மிளகும்
45
இட்டனர், இரக்கம் கெட்டவர் பாவிகள்.
நடத்தை யெல்லாம் நன்கறிந் தாலும்,
யாதும் பேசா திருப்பர் என் கணவர்.
- ↑ 29. ஒற்றி கொடுத்தல்: சொத்தை அனுபவிக்கும் பாத்தியதையுடன் அடைமானம் வைத்தல்.
- ↑ 30. ஐயா - தந்தை.
- ↑ 39. உடையக்காரியைத் தடைவையோ - சொத்துக்கு உடையவளை நீ தடை செய்வாயோ.
- ↑
40. பழைய காட்டுக்கு - முன்னிருந்த இடத்துக்கு. தாய் வீடான நல்லூருக்கு! அங்கு ஏழைக் குடும்பமாதலால் சாப்பாட்டுக்கு வழியின்றிக் கஷ்டப்பட வேண்டி வரும் என்பது கருத்து.