உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடலாடு படலம்

53

பன்னிரு கரத்தப் பரமன் அல்லவே,
இருபது கரத்தவ் இராக்கதன் அல்லவே, 20
ஆயிரங் கரத்தவ் அண்ணலும் அல்லவே!"[1]
என்று பலபல சொல்லி, இறுதியில்
மணந்த முறையாய் மனைவிய ரெங்களைத்
தனித்தனி யாகத் தடங்கை பற்றிக்
கடல்நீ ராடினர். கதையிது பெரிதே! 25
இங்ஙனம்,
ஐந்து முறைநீ ராடிவந் ததனால்,
ஐயோ! அவரும் அறுபது நாள்விடாச்
சுரத்தில் விழுந்து துன்பம் அடைந்தனர்.
அடையவே, 30
ஏட்டைத் திருப்பித் திருப்பி யிருந்தும்
பாட்டைப் பாடிப் பாடி யிருந்தும்,
நாட்டு வைத்தியர் நாளைக் கடத்தினர்.
முடிவில்,
மிஷியன் தெரசர்—மிகத்தய வுள்ளவர்.[2] 35
பொறுமை நல்லகைப் புண்ணிய முள்ளவர்,
இறைவன் அடிகள் இதயத் துள்ளவர்—
வந்தொரு வாரம் மருந்து கொடுத்துக்
கணவரை மீட்டிஎம் கைகளி லாக்கினர்.
இவர்,
காட்டை வெட்டிக் கஷாய மிடவோ 40


  1. 19-20. பன்னிரு கரத்தப் பரமன்: முருகன்.

    இருபது கரத்தவ் இராக்கதன்: இராவணன்.

    ஆயிரங் கரத்தவ் அண்ணல்; வாணாசுரன்.
  2. 35. மிஷியன் தெரசர் - லண்டன் மிஷன் சங்கத்தைச் சேர்ந்த வைத்தியர்.