உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

மருமக்கள்வழி மான்மியம்

கடலைக் குறுக்கிக் குடிநீர் காய்ச்சவோ
மலையை யிடித்துச் சூரணம்[1] வைக்கவோ
சொல்லி, எங்களைத் தொந்தரை[2] செயவிலை;
அன்றியும், 45
பணமோ காசோ[3] பாதிவெற் றிலையோ
எமக்குச் செலவுகள் ஏற்பட்டதுமிலை.
இவ்வறம்,
வையகத் தென்றும் வளர்க! வளர்கவே!
வையகத் தென்றும் வளர்க! வளர்கவே; 50


  1. 43. சூரணம் - சூர்ணம், பொடி.
  2. 44. தொந்தரை - தொந்தரவு, துன்பம்.
  3. 46. பணம், காசு என்பன முன்பு நாஞ்சில் நாட்டில் வழங்கிய நாணயங்கள். பணம் என்பது திருவிதாங்கூர் நாணயத்தில் 4 சக்கரத்தின் மதிப்புடைய வெள்ளி நாணயம்; காசு என்பது செப்புக்காசு. திருவிதாங்கூர் நாணயத்தில் ஒரு சக்கரத்திற்கு 16 காசுகள் முன்பு வழக்கத்தில் இருந்தன. இந்தக் காசு இப்பொழுது வழங்கும் ஒரு நயா பைசா போன்ற
    அமைப்பில் இருந்தது.